Ranji Trophy: மீண்டும் சதம் விளையாசி அதிரடி காட்டிய இஷான் கிஷான்!

By Rsiva kumarFirst Published Dec 16, 2022, 9:39 AM IST
Highlights

ரஞ்சி டிராபி போட்டியில் ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடி வரும் இஷான் கிஷான் முதல் இன்னிங்ஸில் 195 பந்துகளில் 8 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் 132 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

நடந்து முடிந்த வங்கதேசத்திற்கு எதிரான 3ஆவது ஒரு நாள் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷான் அதிரடியாக ஆடி 131 பந்துகளில் 10 சிக்சர்கள் , 24 பவுண்டரிகளுடன் 210 ரன்கள் குவித்து தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். ஒரு நாள் போட்டியில் இடம்பெற்று விளையாடிய இஷான் கிஷான், தற்போது வங்கதேசத்திற்கு எதிராக நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ரஞ்சி டிராபி: சுதர்சன், ஜெகதீசன், அபரஜித் அபார சதம்.. ஹைதராபாத்துக்கு எதிராக தமிழ்நாடு அணி ஆதிக்கம்

இந்த நிலையில், ரஞ்சி டிராபி போட்டியில் கேரளா அணிக்கு எதிராக ஜார்க்கெண்ட் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். அந்த வகையில், முதல் ஆடிய கேரளா அணி 475 ரன்கள் குவித்தது. இதில், ரோஹன் பிரேம் (79), சஞ்சு சாம்சன் (72), அக்‌ஷய் சந்திரன் (150), சிஜோமோன் ஜோசேப் (83) என்று அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தனர்.

பிரான்ஸ் வீரர்களுக்கு வைரஸ் தாக்குதல் – இறுதிப் போட்டியில் என்ன செய்யப் போகிறது?

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஜார்க்கெண்ட் அணியில் சௌரப் திவாரி 97 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து களமிறங்கிய இஷான் கிஷான் 195 பந்துகளில் 8 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் 132 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வரும் இஷான் கிஷான் அடுத்தடுத்து இரட்டை சதம், சதம் என்று குவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

இது வெறும் தொடக்கம் தான்டா தம்பி.. அறிமுக இன்னிங்ஸில் சதமடித்த அர்ஜுன் டெண்டுல்கருக்கு அக்கா சாரா வாழ்த்து

click me!