ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பதவிக்கான போட்டியில் இஷான் கிஷான் மற்றும் கேஎஸ் பரத் இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் 7 ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்தப் போட்டியின் மூலமாக தொடர்ந்து இந்தியா 2ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. முதல் முறையாக 2021-2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா முதல் முறையாக தகுதி பெறுள்ளது.
WTC Final: India vs Australia - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி – இந்தியா கடந்து வந்த பாதை!
இன்னும் 2 நாட்களில் நடக்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியிக் கேஎஸ் பரத் மற்றும் இஷான் கிஷான் ஆகியோருக்கு இடையில் யார் விக்கெட் கீப்பிராக அணியில் இடம் பெறுவது என்பதற்கான போட்டி நிலவுகிறது. இதுவரையில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட இஷான் கிஷான் விளையாடவில்லை. மாறாக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கேஸ் பரத் அரைசதம் மற்றும் சதம் இல்லாமல் 101 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதுவரையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா விக்கெட் கீப்பர் யார் என்பதை முடிவு செய்யவில்லை.
பதிரனாவை உட்கார வச்சதற்கு பலன் கிடைச்சிருச்சு: இலங்கை 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
விமல் குமார் என்ற பத்திரிக்கையாளர் யூடியூப் சேனல் ஒன்றில் வீடியோ ஒன்றை அப்லோடு செய்துள்ளார். அதில், இஷான் கிஷானுக்கு ஆதரவாக ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்னும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகாத இஷான் கிஷான் தான் 11 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்றும், இடது கை பேட்ஸ்மேனான இஷான் கிஷானால் அதிக ரன்கள் குவிக்க முடியும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற ஹீனா மல்லிக், பாரத்ப்ரீத் சிங்!