
ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடர் முதல் முதலாக கடந்த 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் சாம்பியனானது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வந்தது. இந்தியாவில் கொரோனா தாக்கம் இருந்த போது, ஐபிஎல் தொடரானது, வெளிநாடுகளில் நடத்தப்பட்டது.
மும்பை அணிக்கு எதிராக பந்து வீசி விக்கெட் கைப்பற்றிய ஜஸ்ப்ரித் பும்ரா!
அண்மையில் நடந்து முடிந்த 16ஆவது ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5ஆவது முறையாக சாம்பியனானது. இந்த நிலையில் தான் வரும் 2024 ஆம் ஆண்டு நடக்க உள்ள ஐபிஎல் 17ஆவது சீசன், இந்தியாவில் லோக் சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில், வெளிநாடுகளில் நடத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 5 அணிகள் கொண்ட டி20 கிரிக்கெட் போட்டிக்கு வாய்ப்பு!
அதுமட்டுமின்றி வரும் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரும் நடக்கிறது. அதுவும் ஜூன் 4ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் நடக்கிறது. மேலும், இங்கிலாந்து டெஸ்ட் தொடரும் நடக்க இருக்கிறது. இப்படி ஒரே நேரத்தில் 3 முக்கிய நிகழ்வுகள் நடக்க உள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரை முன் கூட்டியே திட்டமிட வேண்டிய கட்டாயத்தில் தற்போது பிசிசிஐ உள்ளது.
ஐபிஎல் தொடரானது மார்ச் முதல் மே மாதம் வரையில் நடத்தப்படும் என்று ஏற்கனவே திட்டமிடப்பட்டுவிட்டது. இதில் எந்த மாற்றமும் இல்லை. வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இந்த தொடர் மார்ச் 11 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பிறகு வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடருக்கு தயாராவார்கள்.
WI vs IND: 3ஆவது ODIயிலும் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றுவோம் – ஷாய் ஹோப்!
இதையடுத்து ஜூன் 4ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையில் டி20 உலகக் கோப்பை நடக்க இருக்கிறது. அதற்குள்ளாக இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடர் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலானது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மேலும் பல கட்டுப்பாடுகளை விதிக்கும்.
எனினும், கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது பிசிசிஐ தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்தியது. ஆனால், 2014 ஆம் ஆண்டு தேர்தலின் போது ஐபிஎல் தொடரில் பாதி போட்டிகளில் மட்டுமே மாற்றங்கள் செய்யப்பட்டது. இதுவே 2009 ஆம் ஆண்டு தேர்தலில் மொத்தமாகவே மாற்றம் செய்யப்பட்டது.
தோனியின் மூத்த சகோதரி ஜெயந்தி குப்தா யாரை திருமணம் செய்திருக்கிறார் தெரியுமா?
இந்தியாவில் ஐபிஎல் 2024 தொடரை நடத்தமுடியவில்லை என்றால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சில போட்டிகளுக்கு சாதகமாக இருக்கும். கூடுதலாக பிளே ஆஃப் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் அல்லது அமெரிக்காவில் நடத்த சாத்தியக் கூறுகள் இருக்கிறது. ஏனென்றால், டி20 உலகக் கோப்பை தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
எனினும், ஐபிஎல் 2024 எங்கு நடத்தப்படும் என்பது குறித்து கூடிய விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.