IPL 2022 சிஎஸ்கே அணி இந்த 4 வீரர்களைத்தான் தக்கவைக்கணும்..! இர்ஃபான் பதான் அதிரடி

Published : Nov 28, 2021, 08:54 PM IST
IPL 2022 சிஎஸ்கே அணி இந்த 4 வீரர்களைத்தான் தக்கவைக்கணும்..! இர்ஃபான் பதான் அதிரடி

சுருக்கம்

ஐபிஎல் 15வது சீசனில் எந்த 4 வீரர்களை சிஎஸ்கே அணி தக்கவைக்க வேண்டும் என்று இர்ஃபான் பதான் கருத்து கூறியுள்ளார்.  

ஐபிஎல்லில் இதுவரை 8 அணிகள் ஆடிவந்த நிலையில், அடுத்த சீசனிலிருந்து கூடுதலாக 2 அணிகள் சேர்வதால் மொத்தம் 10 அணிகள் ஆடவுள்ளன. லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக களமிறங்குகின்றன.

அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. எனவே ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்றவர்களை விடுவிக்க வேண்டும். 2 புதிய அணிகளும், ஏலத்திற்கு முன்பாக தலா 3 வீரர்களை எடுத்துக்கொள்ளலாம்.

ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை சமர்ப்பிக்க வரும் 30ம் தேதியே கடைசி நாள். எனவே ஒவ்வொரு அணியும் எந்த 4 வீரர்களை தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், டேவிட் வார்னர், ஷிகர் தவான், மயன்க் அகர்வால் ஆகிய வீரர்கள் அவர்கள் சார்ந்த அணிகளால் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஐபிஎல் ஏலம் பரபரப்பாக இருக்கும்.

ஒவ்வொரு அணியும் ஐபிஎல் ஏலத்தில் ரூ.90 கோடி செலவு செய்யலாம். 4 வீரர்களை தக்கவைப்பதென்றால், அதற்கு அதிகபட்சமாக ரூ.42 கோடியை ஒதுக்க வேண்டும். ஒரு அணி தக்கவைக்கும் முதல் வீரருக்கு ரூ.16 கோடியும், 2வது வீரருக்கு ரூ.12 கோடியும், 3வது வீரருக்கு ரூ.8 கோடியும், 4வது வீரருக்கு ரூ.6 கோடியும் கொடுக்கவேண்டும்.

இந்நிலையில், ஒவ்வொரு அணியும் எந்த 4 வீரர்களை தக்கவைக்கும் என்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இர்ஃபான் பதான் ஒவ்வொரு அணியும் எந்த 4 வீரர்களை தக்கவைக்கலாம் என்று கருத்து கூறிவருகிறார்.

அந்தவகையில், 4 முறை சாம்பியனும், நடப்பு சாம்பியனுமான சிஎஸ்கே அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்கும் என்று இர்ஃபான் பதான் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள இர்ஃபான் பதான், தோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய மூவரையும் சிஎஸ்கே அணி தக்கவைத்தே ஆக வேண்டும். டுப்ளெசிஸுக்கு 37 வயதாகிவிட்டது. எனவே ஒரு ஆல்ரவுண்டரை எடுக்கலாம். சாம் கரன் - மொயின் அலி ஆகிய இருவரில் ஒருவரை எடுக்கலாம். என்னுடைய தேர்வு மொயின் அலி தான் என்று இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SL Test: சிங்கம் ரீ-என்ட்ரி! உடற்தகுதி தேர்வில் பும்ரா கெத்து! இந்திய ரசிகர்களுக்கு ஸ்வீட் நியூஸ்!
Rahane Net Worth: ₹80 கோடி சொத்து! ரஹானேவின் கார்கள், பிசினஸ் ரகசியங்கள் இதோ!