IND vs NZ விராட் கோலி கம்பேக்; இந்திய அணியில் இடத்தை தக்கவைத்த ஷ்ரேயாஸ் ஐயர்! தூக்கி எறியப்படும் சீனியர் வீரர்

By karthikeyan VFirst Published Nov 28, 2021, 7:48 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அணியில் இணையவுள்ளதால், ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கப்படாமல், சீனியர் வீரர் ஒருவர் நீக்கப்பட வேண்டும் என்று டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி கடந்த 25ம் தேதி கான்பூரில் தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி ஆடாததால் மிடில் ஆர்டரில் ஆடும் வாய்ப்பை பெற்றார் ஷ்ரேயாஸ் ஐயர்.

டெஸ்ட் அணியில் ஆட கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக்கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர், அறிமுக டெஸ்ட்டிலேயே அபாரமாக ஆடி சதமடித்தார். அறிமுக டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் சதமடித்த (105) ஷ்ரேயாஸ் ஐயர், 2வது இன்னிங்ஸிலும் அரைசதம் (65) அடித்தார். 

அறிமுக டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் சதம் மற்றும் 2வது இன்னிங்ஸில் அரைசதம் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்தார் ஷ்ரேயாஸ் ஐயர். சர்வதேச அளவில் இந்த சாதனையை படைத்த  10வது வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

2 இன்னிங்ஸ்களிலுமே நெருக்கடியான சூழலில் இறங்கி அணிக்காக அபாரமாக பேட்டிங் ஆடி இந்திய அணியை நல்ல நிலைக்கு கொண்டு சென்றார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அறிமுக டெஸ்ட்டிலேயே, தன்னை புறக்கணிக்க முடியாத அளவிற்கு அணியில் தனக்கான இடத்தை பிடித்துவிட்டார்.

முதல் டெஸ்ட் போட்டி நாளை(நவ.,29) முடியவுள்ள நிலையில், 2வது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 3ம் தேதி தொடங்குகிறது. முதல் டெஸ்ட்டில் ஆடாத கேப்டன் விராட் கோலி, 2வது டெஸ்ட்டில் ஆடுகிறார். எனவே விராட் கோலி ஆடினால், யார் அணியிலிருந்து நீக்கப்படுவார் என்பது பெரும் கேள்வியாக உள்ளது.

புஜாரா, ரஹானே ஆகிய இருவருமே அண்மைக்காலமாக படுமோசமாக ஆடிவருகின்றனர். இந்நிலையில், சதமடித்த ஒரு வீரரை(ஷ்ரேயாஸ் ஐயர்) அணியிலிருந்து நீக்கமுடியாது; அதனால் கோலி அணிக்குள் வருவதால் ரஹானே தான் விலக வேண்டும் என்று டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய டேனியல் வெட்டோரி, தரமான ஒரு அணிக்கெதிராக அறிமுக டெஸ்ட்டிலேயே சதமடித்த ஒரு வீரரை (ஷ்ரேயாஸ்) அணியிலிருந்து நீக்குவது மிகக்கடினம். அதனால் ரஹானே விலகிக்கொண்டு கோலி வழிவிட வேண்டும் என்று வெட்டோரி தெரிவித்துள்ளார்.
 

click me!