IPL Mini Auction 2023: ஏலத்திற்கு முன்பாக ஐபிஎல் அணிகளுக்கு செம குட் நியூஸ்

By karthikeyan VFirst Published Dec 22, 2022, 10:07 PM IST
Highlights

ஐபிஎல் 16வது சீசன் முழுவதும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் ஆடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் 23(நாளை) கொச்சியில் நடக்கிறது. இந்த ஏலத்தில் 405 வீரர்கள் ஏலம் விடப்படுகின்றனர். 10 அணிகளில் காலியாக உள்ள 87 இடங்களை நிரப்புவதற்கான ஏலத்தில் 405 வீரர்கள் ஏலம் விடப்படுகின்றனர். 

கேன் வில்லியம்சன், பென் ஸ்டோக்ஸ், சாம் கரன், ஷகிப் அல் ஹசன், மயன்க் அகர்வால் ஆகிய பெரிய வீரர்கள் ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர்.

IPL Mini Auction 2023: எத்தனை மணிக்கு எந்த சேனலில் பார்க்கலாம்? வீரர்கள் பட்டியல்.. அணிகளின் கையிருப்பு தொகை

ஐபிஎல் 16வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கவுள்ளது. ஐபிஎல் இரண்டரை மாதம் நடக்கும் நிலையில், அடுத்த சீசனில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் முழுமையாக ஆடுவார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

டேவிட் வார்னர், பாட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஸாம்பா ஆகிய முக்கியமான ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல்லில் ஆடுகின்றனர். இவர்கள் அனைத்து போட்டிகளிலும் ஆடுவது அந்தந்த அணிகளுக்கு முக்கியம். அதேபோல ஜோஸ் பட்லர், மொயின் அலி, டேவிட் மலான், லியாம் லிவிங்ஸ்டோன், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகிய பெரிய இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல்லில் ஆடுகின்றனர்.

IPL Mini Auction 2023: மினி ஏலத்தில் சிஎஸ்கே டார்கெட் செய்யும் 3 வீரர்கள்..!

மேலும் பென் ஸ்டோக்ஸ், சாம் கரன், டாம் பாண்ட்டன், கேமரூன் க்ரீன், நேதன் குல்ட்டர்நைல், டேனியல் சாம்ஸ் ஆகிய இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்களும் ஐபிஎல் ஏலத்தில் இடம்பெற்றிருப்பதால் இவர்களையும் ஐபிஎல் அணிகள் ஏலத்தில் எடுக்கும் என்பதால் இவர்களும் முழுமையாக ஐபிஎல்லில் ஆடுவார்கள் என்ற தகவல் ஐபிஎல் அணிகளுக்கு நற்செய்தியாகும்.

click me!