
ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் இன்றும் நாளையும் நடக்கிறது. இன்று பிற்பகல் 12 மணிக்கு தொடங்கி நடந்துவந்த ஏலம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.
பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கேகேஆர், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் பரபரப்பாக வீரர்களை எடுத்துவந்தன.
ஆனால் நல்ல கோர் செட்டப்பை கொண்ட மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் நிதானம் காத்தன. சிஎஸ்கே அணி, ராபின் உத்தப்பா (ரூ.2 கோடி) மற்றும் ட்வைன் பிராவோ (ரூ.4.40 கோடிக்கு எடுத்தது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இதுவரை ஒரு வீரரைக்கூட ஏலத்தில் எடுக்கவில்லை. ஏலம் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில் ஏலதாரர் ஹியூக் எட்மீட்ஸ் திடீரென மயங்கி விழுந்தார். இலங்கை வீரர் வனிந்து ஹசரங்காவை ஏலம் விட்டுக்கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். ஹசரங்காவிற்காக ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் போட்டி போட்டுக்கொண்டிருந்தன. ரூ.10.75 கோடி வரை ஹசரங்காவின் தொகை சென்ற நிலையில், ஏலதாரர் மயங்கிவிழுந்தார்.
ஏலம் விட்டுக்கொண்டிருந்தபோதே அவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அனைத்து ஐபிஎல் அணியினரும் அதிர்ச்சியடைந்தனர். ஏல அரங்கே அமைதி பூங்காவானது. அவரது உடல்நிலை பரிசோதிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்த அப்டேட் இன்னும் வெளிவரவில்லை. தற்போதைக்கு ஏலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.