ஐபிஎல் 16வது சீசனுக்கான ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்கள் விவரங்களை பார்ப்போம்.
ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. 16வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. கடந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடந்ததால், அடுத்த சீசனுக்கான ஏலம் மினி ஏலமாக நடக்கவுள்ளது.
வரும் 23ம் தேதி ஐபிஎல் 16வது சீசனுக்கான ஏலம் நடக்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் விடுவிக்கும் வீரர்கள் பட்டியலை ஏற்கனவே சமர்ப்பித்துவிட்டது. அதனடிப்படையில் ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலத்தில் 714 இந்திய வீரர்கள் மற்றும் 277 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 991 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் இளம் அதிரடி தொடக்க வீரர் கேமரூன் க்ரீன், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இந்த ஏலத்தில் ரூ.2 கோடி அடிப்படை விலையாக கொண்ட பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துள்ளனர்.
இந்த ஏலத்தில் ஐபிஎல் அணிகளால் விடுவிக்கப்பட்ட கேன் வில்லியம்சன், சாம் கரன், ஜேசன் ஹோல்டர், ஷகிப் அல் ஹசன், ஜேசன் ராய், மயன்க் அகர்வால் ஆகிய முக்கியமான வீரர்கள் இந்த ஏலத்தில் இடம்பிடித்துள்ளனர்.
ரூ.2 கோடி அடிப்படை விலையில் உள்ள வீரர்கள்:
கேன் வில்லியம்சன், நேதன் குல்ட்டர்நைல், கேமரூன் க்ரீன், டிராவிஸ் ஹெட், கிறிஸ் லின், டாம் பாண்ட்டன், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், டைமல் மில்ஸ், ஜாமி ஓவர்டன், கிரைக் ஓவர்டன், அடில் ரஷீத், ஃபிலிப் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், ரைலீ ரூசோ, ராசி வாண்டர்சன், ஆஞ்சலோ மேத்யூஸ், நிகோலஸ் பூரன், ஜேசன் ஹோல்டர்.
ரூ.2 கோடி அடிப்படை விலைப்பிரிவில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை.
PAK vs ENG: டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் நாளில் அதிக ரன்களை குவித்து இங்கிலாந்து வரலாற்று சாதனை
ரூ.1.5 கோடி அடிப்படை விலை பிரிவில் உள்ள வீரர்கள்:
சீன் அபாட், ரைலீ மெரிடித், ஜெய் ரிச்சர்ட்ஸன், ஆடம் ஸாம்பா, ஷகிப் அல் ஹசன், ஹாரி ப்ரூக், வில் ஜாக்ஸ், டேவிட் மலான், ஜேசன் ராய், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு.
ரூ.1 கோடி விலை பிரிவில் உள்ள வீரர்கள்:
மயன்க் அகர்வால், கேதர் ஜாதவ், மனீஷ் பாண்டே, முகமது நபி, முஜீபுர் ரஹ்மான், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், ஆண்ட்ரூ டை, ஜோ ரூட், லுக் உட், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், மார்டின் கப்டில், கைல் ஜாமிசன், மேட் ஹென்ரி, டாம் லேதம், டேரைல் மிட்செல், ஹென்ரிச் கிளாசன், டப்ரைஸ் ஷம்ஸி, குசால் பெரேரா, ரோஸ்டான் சேஸ், ரகீம் கார்ன்வால், ஷேய் ஹோப், அகீல் ஹுசைன், டேவிட் வீஸ்.