#IPL2022 மெகா ஏலம் எப்போது? ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைக்க முடியும்? முழு விவரம்

Published : Jul 05, 2021, 02:52 PM IST
#IPL2022 மெகா ஏலம் எப்போது? ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைக்க முடியும்? முழு விவரம்

சுருக்கம்

ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் பிற்பாதியில் நடக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.  

ஐபிஎல் 14வது சீசனில் 29 லீக் போட்டிகள் நடந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. எஞ்சிய போட்டிகள் வரும் செப்டம்பர் - அக்டோபர் காலக்கட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது.

அடுத்த சீசனில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுவதால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. இதுவரை 8 அணிகள் ஐபிஎல்லில் ஆடிவரும் நிலையில், அடுத்த சீசனில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகள் ஆடவுள்ளன. அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது.

மெகா ஏலம் நடக்கவுள்ளதால், ஒவ்வொரு ஐபிஎல் தலா 4 வீரர்களை(2 இந்திய வீரர்கள் + 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்கள் + 1 வெளிநாட்டு வீரர்) மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை கழட்டிவிட வேண்டும். மெகா ஏலம் வரும் டிசம்பர் இறுதியில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!