ராகுல் டிராவிட்டும் தவானும் ரணதுங்காவின் கருத்தை பொருட்படுத்தவே மாட்டாங்க..! முன்னாள் வீரர் அதிரடி

Published : Jul 04, 2021, 10:26 PM IST
ராகுல் டிராவிட்டும் தவானும் ரணதுங்காவின் கருத்தை பொருட்படுத்தவே மாட்டாங்க..! முன்னாள் வீரர் அதிரடி

சுருக்கம்

இலங்கைக்கு இந்தியா அனுப்பியது 2ம் தர இந்திய அணி என்ற ரணதுங்காவின் கருத்தை ராகுல் டிராவிட்டும் ஷிகர் தவானும் பொருட்படுத்தவே மாட்டார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ரிதீந்தர் சோதி தெரிவித்துள்ளார்.  

விராட் கோலி தலைமையில் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், பும்ரா, ஷமி, ஜடேஜா ஆகியோர் அடங்கிய மெயின் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. 

அதனால் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இலங்கைக்கு ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி சென்றுள்ளது. இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு இலங்கைக்கு சென்றுள்ளார். 

வரும் 13ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இந்தியா - இலங்கை இடையே 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. இந்நிலையில், இந்தியா வலுவான அணியை இங்கிலாந்துக்கு அனுப்பிவிட்டு, 2ம் தர அணியை இலங்கைக்கு அனுப்பியிருப்பதாகவும், இது இலங்கை கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய அவமானம் என்றும் இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா விமர்சித்திருந்தார்.

ரணதுங்காவின் விமர்சனத்துக்கு, அப்படியெல்லாம் இல்லை என்று இலங்கை கிரிக்கெட் வாரியமே விளக்கமளித்திருந்தது. ஆகாஷ் சோப்ராவும் ரணதுங்காவிற்கு தக்க பதிலடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில், ரணதுங்காவின் கருத்து குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ரிதீந்தர் சோதி, ரணதுங்காவின் கருத்தை ராகுல் டிராவிட்டும் ஷிகர் தவானும் பொருட்படுத்தவே மாட்டார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். அவர்களின் நோக்கம் முழுதும், இலங்கையை வீழ்த்துவதில் மட்டும்தான் இருக்கும் என்று ரிதீந்தர் சோதி தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

Vaibhav Suryavanshi: இந்திய அணியில் இடம்பிடித்த வைபவ் சூர்யவன்ஷி.. உலக நாடுகளை அலறவிடப்போகும் 15 வயது சூறாவளி!
Virat Kohli: 12 சீசன்களில் 400+ ரன்கள்..! யாருமே தொட்டுப்பார்க்க முடியாத சாதனை..! மிரட்டும் கோலி