அவரு நல்ல வீரர் தான்.. ஆனாலும் இந்திய அணியில் அவருக்கான இடத்தை தக்கவைக்க தொடர்ந்து நல்லா ஆடணும் - பிராட் ஹாக்

Published : Jul 04, 2021, 10:20 PM IST
அவரு நல்ல வீரர் தான்.. ஆனாலும் இந்திய அணியில் அவருக்கான இடத்தை தக்கவைக்க தொடர்ந்து நல்லா ஆடணும் - பிராட் ஹாக்

சுருக்கம்

புஜாரா நல்ல வீரர் தான் என்றாலும், இந்திய அணியில் அவருக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்ள அவர் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.  

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் முக்கியமான நட்சத்திர வீரராக ஜொலித்துவரும் புஜாரா, அண்மைக்காலமாக சரியான ஃபார்மில் இல்லாமல் திணறிவருகிறார்.

புஜாரா 85 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 6244 ரன்கள் அடித்திருந்தாலும், அவரது மிக மெதுவான இன்னிங்ஸ் எப்போதுமே விமர்சனத்துக்குள்ளாகியே உள்ளது. அதிலும், அண்மைக்காலமாக ஸ்டிரைக் ரேட் குறைவாக இருப்பது ஒருபுறம் இருந்தாலும், அவரது பேட்டிங் மிக மோசமாகவுள்ளது. அணியில் அவரது ரோலை சரியாக செய்யவில்லை.

எனவே புஜாராவுக்கு மாற்று வீரரை தேட தொடங்குவதற்கான  நேரம் வந்துவிட்டதாகவே தெரிகிறது.  புஜாரா இடத்தில்  வேறு எந்த பேட்ஸ்மேனை இறக்கலாம் என்ற ரசிகர்களின் விவாதம் சமூக வலைதளங்களில் தொடங்கிவிட்டது.

அந்தவகையில், டுவிட்டரில் புஜாரா குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆஸி., முன்னாள் ஸ்பின்னர் பிராட் ஹாக்,  புஜாரா நல்ல வீரர் தான். ஆனால் அவரது இடத்தை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்து நன்றாக ஆடிக்கொண்டே இருக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் மற்ற வீரர்களைவிட அதிக போட்டிகளில் வாய்ப்பளிக்க தகுதியானவர் புஜாரா என்று பிராட் ஹாக் தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ T20: பேட்டிங் ஸ்டைலை மாற்றுகிறாரா சூர்யகுமார்?.. அவரே சொன்ன அதிரடி பதில்!
IND VS NZ முதல் டி20.. ஷ்ரேயாஸ் ஐயர் இடத்துக்கு 'ஆப்பு' வைத்த இளம் வீரர்.. பிளேயிங் லெவன்!