IPL 2022: புதிதாக களமிறங்கும் அகமதாபாத் அணியின் அதிகாரப்பூர்வ பெயர் வெளியீடு..! எப்படி இருக்குனு பாருங்க

Published : Feb 07, 2022, 04:47 PM IST
IPL 2022: புதிதாக களமிறங்கும் அகமதாபாத் அணியின் அதிகாரப்பூர்வ பெயர் வெளியீடு..! எப்படி இருக்குனு பாருங்க

சுருக்கம்

ஐபிஎல் 15வது சீசனில் புதிதாக களமிறங்கும் அகமதாபாத் அணி, அதிகாரப்பூர்வமாக அந்த அணியின் பெயரை அறிவித்துள்ளது.  

ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக இணைந்துள்ளன. இந்த சீசனில் 10 அணிகள் ஆடுவதால் இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்தது. லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகளும் ஏலத்திற்கு முன்பாக தலா 3 வீரர்களை  எடுத்தது.

வரும் 12-13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடக்கவுள்ள இந்த மெகா ஏலம் மிக சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். இந்த ஏலத்தில் கலந்துகொள்ள 1214 வீரர்கள் பெயர்களை பதிவு செய்திருந்த நிலையில், அதில் 590 வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.

புதிதாக களமிறங்கும் லக்னோ அணி கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ரவி பிஷ்னோய் ஆகிய மூவரையும் ஏலத்திற்கு முன் எடுத்தது. அணிக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் என பெயர் சூட்டியதுடன் லோகோவையும் வெளியிட்டது.

ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான், ஷுப்மன் கில் ஆகிய மூவரையும் ஏலத்திற்கு முன் எடுத்த அகமதாபாத் அணி, அணியின் பெயரை அறிவிக்காமல் இருந்துவந்த நிலையில், அகமதாபாத் டைட்டன்ஸ் என பெயர் சூட்டியிருக்கிறது. அகமதாபாத் டைட்டன்ஸ் என்ற பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
 

PREV
click me!

Recommended Stories

இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?
IND vs SA 1st T20: ஹர்சித் ராணா நீக்கம்.. தமிழக வீரருக்கும் இடமில்லை.. இந்திய அணி பிளேயிங் லெவன்!