#PBKSvsRR பஞ்சாப் எதிரான போட்டியில் வெற்றி பெற்ற கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்..!

By vinoth kumarFirst Published Sep 22, 2021, 3:57 PM IST
Highlights

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசாததால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசாததால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 185 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் அனது. அந்த அணியில் அதிகபட்சமாக லீவிஸ் 36, ஜெய்ஸ்வால் 49, மஹிபால் லோம்ரோர் 43 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். பஞ்சாப் அணியில் சிறப்பாக பந்து வீசிய அர்ஷ்தீப் 5 விக்கெட்டுகளையும், சமி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் சிறப்பான தொடக்கம் தந்தனர். ஆனாலும், ராஜஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சால் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய கார்த்தி தியாகி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அதிக நேரம் பந்து வீச எடுத்துக்கொண்டதால் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

click me!