IPL 2021 டெல்லி கேபிடள்ஸுக்கு எதிராக களமிறங்கும் உத்தேச சன்ரைசர்ஸ் அணி..! வார்னருக்கே அணியில் இடம் இல்லை

Published : Sep 21, 2021, 10:51 PM IST
IPL 2021 டெல்லி கேபிடள்ஸுக்கு எதிராக களமிறங்கும் உத்தேச சன்ரைசர்ஸ் அணி..! வார்னருக்கே அணியில் இடம் இல்லை

சுருக்கம்

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 14வது சீசனின் 2வது பாகம்  ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நாளை துபாயில் நடக்கும் போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் மோதுகின்றன.

டெல்லி கேபிடள்ஸ் அணி இந்த சீசனின் முதல் பாதியில் 8 போட்டிகளில் ஆடி 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்றது. ஆனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியோ, ஆடிய 7 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

எனவே சன்ரைசர்ஸ் அணிக்கு ஒரு வெற்றி அவசியம் தேவைப்படுகிறது. வெற்றி கட்டாயத்தில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் அணி, வலுவான டெல்லி அணியை எதிர்கொள்கிறது. 

சன்ரைசர்ஸ் அணியில் முன்னாள் கேப்டனும் அதிரடி தொடக்க வீரருமான டேவிட் வார்னருக்கு இடம் கிடைக்காது. அவருக்கு பதிலாக இங்கிலாந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஜேசன் ராய் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜேசன் ராயுடன் ரிதிமான் சஹா தொடக்க வீரராக இறங்குவார். கேப்டன் பாண்டே, அப்துல் சமாத், விஜய் சங்கர் ஆகியோரும் ஆடுவார்கள். ஜேசன் ஹோல்டர் - ரூதர்ஃபோர்டு ஆகிய இருவரில் ஒருவரும், கலீல் அகமது -  சந்தீப் ஷர்மா ஆகிய இருவரில் ஒருவரும் இறங்குவார்கள். 

ஸ்பின்னர் ரஷீத் கான். ஃபாஸ்ட் பவுலர்கள் புவனேஷ்வர் குமார் மற்றும் நடராஜன் கண்டிப்பாக ஆடுவார்கள்.

உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

ஜேசன் ராய், ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, கேன் வில்லியம்சன்(கேப்டன்), அப்துல் சமாத், விஜய் சங்கர், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு/ஜேசன் ஹோல்டர், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், டி.நடராஜன், கலீல் அகமது/சந்தீப் ஷர்மா.
 

PREV
click me!

Recommended Stories

vaibhav suryavanshi: வெறும் வயிற்றில் சிக்ஸர் மழை! வைபவ் சூர்யவன்ஷியின் 'நோ ஃபுட்' சீக்ரெட்!
Sanju Samson: இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சன் அதிரடி நீக்கம்! 3 இளம் வீரர்களுக்கு இடம்!