கார்த்திக் தியாகியின் மெர்சலான பந்து வீச்சு.. 6 பந்துகளில் 4 ரன்கள் எடுக்க முடியாமல் படு மட்டமாக தோற்ற பஞ்சாப்

By vinoth kumarFirst Published Sep 22, 2021, 8:34 AM IST
Highlights

போட்டியில் யாரும் எதிர்பார்க்காத திருப்பத்தை அவர் கார்த்தி தியாகி உருவாக்கினார். கடைசி ஓவரில் 1 ரன்னை மட்டுமே விட்டு கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி ராஜஸ்தானை 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற செய்தார். கடைசி ஓவரை சிறப்பாக பந்து வீசிய கார்த்தி தியாகி ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். 

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி சிறப்பாக பந்து வீசியதை அடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் 14வது சீசனின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸும் ராஜஸ்தான் ராயல்ஸும் மோதின.  முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் எவின் லூயிஸும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 5.3 ஓவரில் 54 ரன்களை சேர்த்து கொடுத்தனர். லூயிஸ் 21 பந்தில் 36 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

அதிரடியாக ஆடி அரைசதத்தை நெருங்கிய ஜெய்ஸ்வால் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் சாம்சன் மற்றுமொருமுறை ஏமாற்றமளித்தார். வெறும் 4 ரன்கள் மட்டுமே அடித்து அவர் ஆட்டமிழந்தார். லிவிங்ஸ்டோன் 17 பந்தில் 25 ரன்கள் அடிக்க, அதே 17 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 43 ரன்களை குவித்தார் மஹிபால் லாம்ரோர். அவரது அதிரடியால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

அவரது விக்கெட்டுக்கு பிறகு, ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, கிறிஸ் மோரிஸ் ஆகிய அனைவருமே ஒற்றை இலக்கத்தில் அடுத்தடுத்து வெளியேற, 20 ஓவரில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ராஜஸ்தான் அணி. பஞ்சாப் அணியில் சிறப்பாக பந்து வீசிய அர்ஷ்தீப் 5 விக்கெட்டுகளையும், சமி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. 

கேப்டன் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் அதிரடியாக ஆடி சிறப்பான தொடக்கம் தந்தனர்.  பஞ்சாப் அணி 120 ரன்கள் எடுத்த போது தான் முதல் விக்கெட் இழந்தது. ராகுல் ஒரு ரன்னில் அரைசத்தை தவறவிட்டார். மயங்க் அகர்வால் 47 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சர்கள் விளாசி 67 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகினார். இறுதியில் 6 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கார்த்தி தியாகி பந்துவீசினார். 

போட்டியில் யாரும் எதிர்பார்க்காத திருப்பத்தை அவர் கார்த்தி தியாகி உருவாக்கினார். கடைசி ஓவரில் 1 ரன்னை மட்டுமே விட்டு கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி ராஜஸ்தானை 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற செய்தார். கடைசி ஓவரை சிறப்பாக பந்து வீசிய கார்த்தி தியாகி ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். 

click me!