அவன் ஒருத்தன் தான் கரெக்ட்டா ஆடுனான்.. மத்தவன்லாம் வேஸ்ட்டு..! பாக்., வீரர்களை கிழி கிழினு கிழித்த இன்சமாம்

By karthikeyan VFirst Published Jul 11, 2021, 10:18 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் ஆட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்.
 

சர்வதேச கிரிக்கெட்டில் டாப் அணிகளில் ஒன்றாக திகழ்ந்த பாகிஸ்தான் அணி, இம்ரான் கான் கேப்டன்சியில் 1992ல் உலக கோப்பையையும் வென்றது. மிகச்சிறந்த அணியாக திகழ்ந்த பாகிஸ்தான், 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் கூட இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.

வெற்றி - தோல்விகளுக்கு அப்பாற்பட்டு சிறந்த கிரிக்கெட்டை ஆடும் அணியாக திகழ்ந்த பாகிஸ்தான், இப்போது மிக மோசமாக ஆடிவருகிறது. அண்மைக்காலமாக அந்த அணியின் செயல்பாடு மோசமாக உள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக நடந்துவரும் தொடரில், முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும், அனுபவமற்ற வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்தது.

முதல் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான், 2வது போட்டியில் 56 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. பாகிஸ்தான் ஆடுவதை பார்த்து விரக்தியும் வெறுப்பும் அடைந்த ஷோயப் அக்தர், அந்த அணியை மிகக்கடுமையாக விமர்சித்தார். 

அதேபோல பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கும் பாகிஸ்தான் அணி ஆடிய விதத்தை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள இன்சமாம் உல் ஹக், பாகிஸ்தான் அணி ஒருநாள் கிரிக்கெட்டில் டி20யை போல ஆட முயற்சி செய்கிறது. டி20 கிரிக்கெட்டை போல பெரிய ஷாட்டுகளை ஆட முயற்சிக்கின்றனரே தவிர, சிங்கிள் ரொடேட் செய்து ஆடுவதில்லை. பாகிஸ்தான் அணி 50 ஓவர் முழுமையாக கூட ஆடவில்லை. ஆனால் 151 டாட் பந்துகள். ஃபகர் ஜமான் 50 பந்தில் 8 ரன் அடிக்கிறார். அதுவே, பேட்ஸ்மேன் மீது அழுத்தத்தை போட பவுலர்களுக்கு வழிவகுக்கும். 

சௌத் ஷகீல் மட்டுமே ஒருநாள் போட்டியில் எப்படி ஆடவேண்டுமோ அப்படி ஆடினார். அவர் அதிகமான ஸ்டிரைக் ரேட் ஆடாவிட்டாலும், நம்பிக்கையுடன் அழுத்தத்தை கையாண்டு அருமையாக ஆடினார். அது ஒன்றுதான் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கான நல்ல அறிகுறி. அவர் இன்னும் சில விஷயங்களில் மேம்பட வேண்டியிருக்கிறது. ஆனால் நல்ல நம்பிக்கையையும் நல்ல பேட்டிங் டெக்னிக்கையும் பெற்றுள்ள வீரராக இருக்கிறார் என்று இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
 

click me!