இந்திய அணியின் கேவலமான சாதனை.. இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்தின் டாப் 2 வெற்றி.. சுவாரஸ்ய தகவல்கள்

By karthikeyan VFirst Published Feb 11, 2020, 3:54 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என ஒயிட்வாஷ் செய்து நியூசிலாந்து அணி சாதனை படைத்துள்ளது. 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி, 5-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து வென்றது. அதற்கு பழிதீர்க்கும் விதமாக ஒருநாள் தொடரை 3-0 என வென்றுள்ளது நியூசிலாந்து. 

முதல் ஒருநாள் போட்டியில் 348 ரன்கள் என்ற கடினமான இலக்கை வெற்றி பெற்ற நியூசிலாந்து, இரண்டாவது போட்டியில், இந்திய அணியை 274 ரன்கள் என்ற இலக்கை அடிக்கவிடாமல் தடுத்து வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று மவுண்ட் மாங்கனூயில் நடந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 297 ரன்கள் என்ற இலக்கை 48வது ஓவரில் அடித்து அபார வெற்றி பெற்றது. 

கப்டில் மற்றும் காலின் டி கிராண்ட் ஹோமின் அதிரடியான பேட்டிங்கால் நியூசிலாந்து அணிக்கு வெற்றி எளிதானது. அதிரடியாக ஆடிய காலின் டி கிராண்ட் ஹோம், வெறும் 21 பந்தில் அரைசதம் அடித்தார். 

இந்த தொடரின் சுவாரஸ்யமான சில நல்ல மற்றும் மோசமான சாதனைகளை பார்ப்போம். 

1. இந்திய அணி 30 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. இந்திய அணி கிரிக்கெட் வரலாற்றிலேயே இத்துடன் சேர்த்து மொத்தமாக 4 முறை தான் ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. 1984 மற்றும் 1989ல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆன இந்திய அணி, 2007ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான  போட்டிகள் கொண்ட தொடரில் 4-0 என ஒயிட்வாஷ் ஆனது. ஒரு போட்டி நடக்கவில்லை. அதன்பின்னர் இப்போதுதான் நான்காவது முறையாக ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் ஒயிட்வாஷ் தான் என்றாலும் ஒரு போட்டி நடக்கவில்லை. எனவே எல்லா போட்டியுமே ஆடியும் இந்திய அணி ஒயிட்வாஷ் ஆனது என்றால், வெஸ்ட் இண்டீஸிடம் 1989ல் ஆனதற்கு பிறகு இப்போதுதான் ஒயிட்வாஷ். 

2. இந்திய அணிக்கு எதிரான நியூசிலாந்தின் மிகச்சிறந்த வெற்றிகள் இரண்டுமே இந்த தொடரில் பெறப்பட்டவை. முதல் போட்டியில் 348 ரன்களை விரட்டியதுதான் இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்தின் மிகச்சிறந்த வெற்றி. இரண்டாவது சிறந்த வெற்றி, இந்த போட்டியில் 297 ரன்கள் என்ற இலக்கை விரட்டியதுதான். 

Also Read - கப்டில், கிராண்ட்ஹோம் காட்டடி.. சட்டுபுட்டுனு சோலியை முடித்த நியூசிலாந்து.. ஒருநாள் தொடரில் இந்தியா ஒயிட்வாஷ்

3. ஒருநாள் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக அடிக்கப்பட்ட அதிவேக அரைசதத்தில் நான்காமிடத்தை பிடித்துள்ளார் காலின் டி கிராண்ட் ஹோம். இந்த போட்டியில் அவர் 21 பந்தில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல், அஃப்ரிடி, மேரிலையர் ஆகியோருக்கு அடுத்து டி கிராண்ட் ஹோம் உள்ளார். 

click me!