டி20 உலக கோப்பை போட்டிகளை தியேட்டரில் ஒளிபரப்புவதற்கான ஒப்பந்தத்தை ஐசிசியுடன் கையெழுத்திட்டுள்ளது ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸ் தியேட்டர் நிர்வாகம்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள அனைத்து அணிகளும் பயிற்சி போட்டிகளில் தீவிரமாக தயாராகிவருகின்றன.
டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்படும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, வரும் 23ம் தேதி அதன் முதல் சூப்பர் 12 சுற்று போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
undefined
இதையும் படிங்க - மகளிர் ஆசிய கோப்பை: அரையிறுதியில் தாய்லாந்தை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது இந்திய அணி
கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் படுதோல்வியடைந்த இந்திய அணி, இந்த உலக கோப்பையை வெல்லும் என்று ரசிகர்களால் பேரார்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த உலக கோப்பையில் இந்திய அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
க்ரூப் 2ல் இடம்பெற்றுள்ள இந்திய அணி வரும் 23ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொண்டு ஆடுகிறது. அதன்பின்னர், 27ம் தேதி ஏ2 (இன்னும் உறுதியாகவில்லை - தகுதிச்சுற்றில் ஏ பிரிவில் இடம்பெறும் 2வது அணி) அணியையும், 30ம் தேதி தென்னாப்பிரிக்காவையும், நவம்பர் 2ம் தேதி வங்கதேசத்தையும் எதிர்கொள்கிறது இந்திய அணி.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் பெரிய பிரச்னையே இதுதான்..! வாசிம் அக்ரம் எச்சரிக்கை
டி20 உலக கோப்பையில் இந்திய அணி ஆடும் போட்டிகளை தியேட்டரில் நேரலையாக ஒளிபரப்பும் உரிமத்தை பெற்றுள்ளது ஐநாக்ஸ் மல்ட்பிளக்ஸ். ஐசிசி - ஐநாக்ஸ் நிறுவனம் இடையே இந்த இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.