மகளிர் ஆசிய கோப்பை: அரையிறுதியில் தாய்லாந்தை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது இந்திய அணி

By karthikeyan VFirst Published Oct 13, 2022, 2:05 PM IST
Highlights

மகளிர் ஆசிய கோப்பை அரையிறுதியில் தாய்லாந்தை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி ஃபைனலுக்கு முன்னேறியது.
 

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடந்துவருகிறது. ஆசிய கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியா, தாய்லாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

முதல் அரையிறுதியில் இந்தியா - தாய்லாந்து அணிகள் மோதின. சில்ஹெட்டில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் பெரிய பிரச்னையே இதுதான்..! வாசிம் அக்ரம் எச்சரிக்கை

இந்திய அணி:

ஸ்மிரிதி மந்தனா, ஷஃபாலி வெர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), பூஜா வஸ்ட்ராகர், தீப்தி ஷர்மா, ஸ்னே ராணா, ராதா யாதவ், ரேணுகா சிங், ராஜேஷ்வரி கெய்க்வாட்.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வெர்மா அடித்து ஆடி 28 பந்தில் 42 ரன்கள் அடித்தார். மற்றொரு தொடக்க வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனா 14 பந்தில் 13 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார். அதன்பின்னர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 27 ரன்களும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 36 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 148 ரன்கள் அடித்தது.

149 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தாய்லாந்து அணியில் கேப்டன் சாய்வை மற்றும் பூச்சாதம் ஆகிய இருவரும் அதிகபட்சமாக 21 ரன்கள் அடித்தனர். மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, தாய்லாந்து அணி 20 ஓவரில் வெறும் 74 ரன்கள் மட்டுமே அடித்தது. 

இதையும் படிங்க - பும்ராவுக்கு மாற்று வீரராக ஷமி - சிராஜ் இருவரில் யாரை எடுக்கலாம்..? கவாஸ்கர் கருத்து

74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி ஆசிய கோப்பை ஃபைனலுக்கு முன்னேறியது. இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஃபைனலில் ஜெயிக்கும் அணியை இந்திய அணி ஃபைனலில் எதிர்கொள்ளும்.
 

click me!