நாக் அவுட் போட்டிகளில் கொஞ்ச தப்பு பண்ணாலே புட்டுகிட்டு போயிடும்.. பண்ணது எல்லாமே தப்புனா தோத்துதான் போகணும்

By karthikeyan VFirst Published Jul 11, 2019, 11:48 AM IST
Highlights

நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனின் கேப்டன்சி அபாரம். ஃபீல்டிங் செட்டப், பவுலிங் சுழற்சி ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டார். கேப்டனுக்கு ஒத்துழைப்பு கொடுத்து திட்டங்களை பக்காவாக செயல்படுத்தினர் நியூசிலாந்து வீரர்கள். நியூசிலாந்து அணியின் அணுகுமுறை அபாரமாக இருந்தது. 
 

உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறியது. இந்த போட்டியில் இந்திய அணி தோற்றதற்கு பேட்டிங் ஆர்டரில் செய்த மாற்றங்கள் முக்கியமான காரணம். 

பொதுவாகவே கிரிக்கெட்டில், அதிலும் குறிப்பாக நாக் அவுட் போட்டிகளில், ஒரு அணி நன்றாக ஆடுவதன் அடிப்படையில் முடிவுகள் அமையாது. எந்த அணி குறைந்த தவறுகள் செய்கிறதோ அந்த அணி வெல்லும்; அதிக தவறுகள் செய்யும் அணி தோற்கும். இந்தியா - நியூசிலாந்து போட்டியில் கொஞ்சம் தவறுகள், நிறைய தவறுகள் என்று சொல்வதற்கே இடமில்லை. ஏனெனில் நியூசிலாந்து அணி தவறுகளே செய்யவில்லை. அதற்கு எதிர்மாறாக இந்திய அணி தவறுகள் மட்டும்தான் செய்தது.

 

நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனின் கேப்டன்சி அபாரம். ஃபீல்டிங் செட்டப், பவுலிங் சுழற்சி ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டார். கேப்டனுக்கு ஒத்துழைப்பு கொடுத்து திட்டங்களை பக்காவாக செயல்படுத்தினர் நியூசிலாந்து வீரர்கள். நியூசிலாந்து அணியின் அணுகுமுறை அபாரமாக இருந்தது. 

நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்ட நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக பேட்டிங் ஆர்டரில் பரிசோதனை முயற்சிகளை செய்த இந்திய அணி, அரையிறுதி போட்டியிலும் அதையே செய்தது. முதல் மூன்று விக்கெட்டுகள் 5 ரன்களுக்கே விழுந்துவிட்ட நிலையில், ரிஷப்புடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியிலிருந்து சரிவிலிருந்து மீட்டெடுக்க சரியான வீரர் தோனி தான். 

ரிஷப்புக்கு ஆலோசனைகளை வழங்கி அவரை சரியாக வழிநடத்தி பார்ட்னர்ஷிப் அமைக்க தோனி தான் சரியான ஆள். ஆனால் ஏழாம் வரிசையில் இறங்கி ஃபினிஷிங் செய்வதற்காகவும், பேட்டிங்கில் டெப்த் தேவை என்பதற்காக மட்டுமே அணியில் எடுக்கப்பட்ட தினேஷ் கார்த்திக்கை தோனிக்கு முன்பு ப்ரோமோட் செய்தது மிகப்பெரிய தவறு. ஏற்கனவே 5 ரன்களுக்கே மூன்று விக்கெட்டுகளை இழந்து வெந்து போயிருக்கும் புண்ணில், தானும் அவுட்டாகி வேலை பாய்ச்சினார் தினேஷ் கார்த்திக்.

தினேஷ் கார்த்திக்கை தோனிக்கு முன் ப்ரோமோட் செய்தது தவறு. அது பரவாயில்லை போயிட்டு போகுது, தினேஷ் கார்த்திக் அவுட்டான பிறகாவது தோனியை இறக்கியிருக்கலாம். ஆனால் அப்போதும் அவரை இறக்காமல் ஹர்திக் பாண்டியாவை இறக்கிவிட்டார்கள். ஹர்திக் பாண்டியா நன்றாகத்தான் ஆடினார். ஆனாலும் அவருடைய ரோல் என்பது வேறு. மிடில் ஓவர்களில் பார்ட்னர்ஷிப் அமைத்து இன்னிங்ஸை பில்ட் செய்வதில் தோனியின் அனுபவம் அபாரமானது. அவரை சற்று முன்னதாக இறக்கிவிடாமல் ஏழாம் வரிசையில் இறக்கிவிட்டு அவருக்கு அழுத்தத்தை அதிகரித்து விட்டனர். 

தோனியை பின்னால் இறக்கலாம் என்ற ஐடியா யாருடையது என்பது தெரியவில்லை. அது ஒருவேளை ரவி சாஸ்திரியின் ஐடியாவாக இருக்கத்தான் வாய்ப்புள்ளது. வில்லியம்சன் ஒருபுறம் அபாரமாக கேப்டன்சி செய்து, நியூசிலாந்து அணி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி கொண்டிருக்க, மறுபுறம் இந்திய அணி திட்டங்களில் உறுதியாக இல்லமால் முக்கியமான போட்டியில் இக்கட்டான சுழலில் சொதப்பிவிட்டது. 
 

click me!