கடைசி நிமிஷத்துல அவங்க 2 பேரோட ரோலையும் மாத்துனதுதான் போட்டியின் முடிவையும் மாத்திடுச்சு.. அந்த மொக்க ஐடியா யாரு கொடுத்ததுனு தெரியல

By karthikeyan VFirst Published Jul 11, 2019, 10:56 AM IST
Highlights

முதல் 3 பேட்ஸ்மேன்களையே அதிகமாக சார்ந்திருக்கும் இந்திய அணியின், அந்த முதல் மூவரும் தலா ஒரு ரன்னுக்கு வெளியேறினர். அதனால் இந்திய அணிக்கு நெருக்கடி அதிகரித்தது. 

உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி இலக்கை விரட்டமுடியாமல் தோற்றதற்கு இந்திய அணி கடைசி நிமிட திட்ட மாற்றங்களும் ஒரு காரணம். 

2015 உலக கோப்பையை போலவே இந்த உலக கோப்பை தொடரிலும் அரையிறுதிக்கு முன் அனைத்து போட்டிகளிலும் அபாரமாக ஆடிய இந்திய அணி, கரெக்ட்டா அரையிறுதியில் சொதப்பியது. 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் முக்கியமான முதல் 3 விக்கெட்டுகள் 5 ரன்களுக்கே விழுந்துவிட்டது. 

முதல் 3 பேட்ஸ்மேன்களையே அதிகமாக சார்ந்திருக்கும் இந்திய அணியின், அந்த முதல் மூவரும் தலா ஒரு ரன்னுக்கு வெளியேறினர். அதனால் இந்திய அணிக்கு நெருக்கடி அதிகரித்தது. மூன்றாவது விக்கெட்டாக ராகுல் ஆட்டமிழந்த பிறகு வழக்கம்போலவே ஐந்தாம் வரிசையில் தோனியை களமிறக்கியிருக்க வேண்டும். அதுதான் சரியான செயலாக இருந்திருக்கும். ஏனெனில் இளம் வீரர் ரிஷப் பண்ட் களத்தில் இருக்கும் நிலையில், அவருக்கு ஆதரவாகவும் ஆலோசனைகளை வழங்கியும் அதேநேரத்தில் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமலும் தோனியால் பார்ட்னர்ஷிப்பை அமைத்திருக்க முடியும்.

ரிஷப் பண்ட்டையும் நல்லமுறையில் வழிநடத்தியிருப்பார். இரண்டாவது பேட்டிங் ஆடினால், தினேஷ் கார்த்திக்கை ஏழாம் வரிசையில் இறக்குவதுதான் இந்திய அணியின் திட்டம். அதை நேற்றைய போட்டியில் கடைபிடித்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் நான்காவது விக்கெட் விரைவில் விழுந்திருக்காது. ஆனால் கடைசி நேரத்தில், அந்த திட்டம் மாற்றப்பட்டிருக்கிறது. ஏழாம் வரிசை பேட்ஸ்மேனாக அணியில் எடுக்கப்பட்டிருந்த தினேஷ் கார்த்திக்கை தோனி இறங்கியிருக்க வேண்டிய ஐந்தாம் வரிசையில் இறக்கிய ஐடியா யாருடையது என்று தெரியவில்லை. 

ஏனெனில் இக்கட்டான சூழலில் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய கட்டாயத்தில், அதை செய்யாமல் தினேஷ் கார்த்திக் வெறும் 6 ரன்களுக்கு வெளியேறினார். அதே தோனியாக இருந்தால் பார்ட்னர்ஷிப் அமைத்திருப்பார். சமீபகாலமாக பெரிய ஷாட் ஆட முடியாமல் திணறிவரும் தோனியை இன்னும் ஒரு சிறந்த ஃபினிஷராகவே பார்த்தது பெரிய தவறு. தோனி இறங்கிய ஏழாம் வரிசையில் தினேஷ் கார்த்திக் இறங்கினால், கடைசி நேரத்தில் ரன்ரேட் அதிகமாக தேவைப்பட்டாலும் தினேஷ் கார்த்திக்கால் அடித்து ஆடமுடியும். ஆனால் தோனி - தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரின் ரோலையும் மாற்றிவிட்டதுதான் ஆட்டத்தின் முடிவையும் மாற்றிவிட்டது. 
 

click me!