#INDvsENG அதுக்காகலாம் வருத்தமே படல.. தோற்றாலும் மீசைய முறுக்கும் கிங் கோலி

By karthikeyan VFirst Published Feb 9, 2021, 11:43 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் குல்தீப்பை சேர்க்காததில் எந்த வருத்தமும் இல்லை என்றும், அந்த முடிவு சரியானதே என்றும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
 

இந்தியா இங்கிலாந்து இடையே சென்னையில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் ஸ்பின் காம்பினேஷன் கடும் விமர்சனத்துக்குள்ளானது.

சீனியர் ஸ்பின்னர் அஷ்வின், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷபாஸ் நதீம் ஆகிய மூவரும் ஸ்பின்னர்களாக ஆடினர். அஷ்வின் மற்றும் சுந்தர் ஆகிய இருவரும் ஆஃப் ஸ்பின்னர்கள்; நதீம் இடது கை ஸ்பின்னர். 2 ஆஃப் ஸ்பின்னர்களை எடுத்ததற்கு பதிலாக குல்தீப்பை எடுத்திருக்க வேண்டும் என்று சிலரும், இடது கை ஸ்பின்னரான நதீமிற்கு பதிலாக இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப்பை சேர்த்திருக்க வேண்டும் என்று சிலரும் கருத்து தெரிவித்தனர்.

வாஷிங்டன் சுந்தர் நன்றாக பேட்டிங் ஆடுவார் என்பதால், பேட்டிங்கை கருத்தில்கொண்டுதான் அவர் சேர்க்கப்பட்டார். சுந்தருக்கு பதிலாகவோ அல்லது நதீமிற்கு பதிலாகவோ குல்தீப்பை சேர்த்திருக்கலாம்; ஆக மொத்தத்தில் குல்தீப்பை சேர்த்திருக்க வேண்டும் என்பதுதான் பொதுக்கருத்து.

இந்திய அணி  முதல் டெஸ்ட்டில் தோற்ற நிலையில், தோல்விக்கு பிறகு இதுகுறித்து பேசிய கேப்டன் விராட் கோலி, குல்தீப்பை எடுக்காததற்கு வருத்தப்படவில்லை. 2 ஆஃப் ஸ்பின்னர்களுடன்(அஷ்வின், சுந்தர்) ஆடியதால், இடது கை ரிஸ்ட் ஸ்பின்னரான குல்தீப்பை எடுத்தால் அவரும் ஆஃப் ஸ்பின்னர்கள் வீசும் திசையிலேயே வீசக்கூடியவர். எனவே வெரைட்டி வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட தேர்வு. எனவே அந்த முடிவு எடுக்கப்பட்டதில் எந்த வருத்தமும் இல்லை என்று கோலி தெரிவித்தார்.

click me!