மும்பை அணியின் புதிய ஹெட் கோச் ரமேஷ் பவார்

Published : Feb 09, 2021, 07:40 PM IST
மும்பை அணியின் புதிய ஹெட் கோச் ரமேஷ் பவார்

சுருக்கம்

மும்பை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் நியமிக்கப்பட்டுள்ளார்.  

உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடர் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக விஜய் ஹசாரே தொடர் நடத்தப்படவுள்ளது. வரும் 20ம் தேதி தொடங்கி மார்ச் 14ம் தேதி வரை இந்த தொடர் நடக்கிறது.

இந்நிலையில், மும்பை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் ஸ்பின்னர் ரமேஷ் பவார் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி மும்பை அணியின் பயிற்சியாளராக பக்னிஸ் நியமிக்கப்பட்டார். சையத் முஷ்டாக் அலி தொடரில் அவர் தான் பயிற்சியாளராக செயல்பட்டார். அந்த தொடரில் மும்பை அணி சோபிக்காத நிலையில், புதிய பயிற்சியாளராக ரமேஷ் பவார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் ஸ்பின்னரான ரமேஷ் பவார், இந்திய மகளிர் அணி உட்பட சில அணிகளின் பயிற்சியாளராக செயல்பட்ட அனுபவம் கொண்டவர். மும்பை கிரிக்கெட் சங்கம், தன் திறமையின் மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை வழங்கியதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள ரமேஷ் பவார், சிறப்பாக செயல்பட்டு மும்பை அணிக்கு சிறப்பாக பயிற்சியளிக்கும் முனைப்பில் உள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA T20: ஆல்ரவுண்டர் விலகல்.. இந்திய அணிக்கு பின்னடைவு.. மாற்று வீரர் இவரா? ரசிகர்கள் ஷாக்!
பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி பந்து வீச தடை.. பாதியில் பந்தை புடுங்கிய நடுவர்.. என்ன நடந்தது?