ஓய் மேனன்.. அவனுங்க ஜாலியா நடு பிட்ச்ல ஓடிகிட்டு இருக்கானுங்க..! அம்பயரிடம் சத்தம் போட்ட கோலி.. வீடியோ

Published : Feb 09, 2021, 04:55 PM IST
ஓய் மேனன்.. அவனுங்க ஜாலியா நடு பிட்ச்ல ஓடிகிட்டு இருக்கானுங்க..! அம்பயரிடம் சத்தம் போட்ட கோலி.. வீடியோ

சுருக்கம்

முதல் டெஸ்ட்டில் ஆடுகளத்தின் குறுக்கே இங்கிலாந்து வீரர்கள் ஓடியதை அம்பயரிடம் புகார் அளித்தார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.  

இந்தியா இங்கிலாந்து இடையே சென்னையில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 578 ரன்கள் அடிக்க, இந்திய அணி வெறும் 337 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் சுருண்டது. 241 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, 178 ரன்களுக்கு சுருண்டதையடுத்து, 420 ரன்கள் என்ற கடின இலக்கை கடைசி இன்னிங்ஸில் விரட்டிய இந்திய அணி, 192 ரன்கள் மட்டுமே அடித்து 227 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இந்த போட்டியின் 2வது இன்னிங்ஸில் ஜாக் லீச் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகிய இருவரும் பேட்டிங் ஆடியபோது, ஆடுகளத்தின் நடுவே ஓடக்கூடாத பகுதியில் ஓடினர். கள நடுவர்களும் அதை கண்டிக்காத நிலையில், அம்பயர் நிதின் மேனனை, ஓய் மேனன் என அழைத்த இந்திய கேப்டன் கோலி, அவர்கள்(இங்கிலாந்து வீரர்கள்) ஆடுகளத்தின் நடுவே ஜாலியாக ஓடிக்கொண்டிருக்கின்றனர் என்று புகாரளித்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அந்த வீடியோ இதோ..
 

PREV
click me!

Recommended Stories

IPL Auction 2026: ஆஸி. ஆல்ரவுண்டரை 25 கோடிக்கு தட்டித்தூக்கிய KKR..! 2 அதிரடி வீரர்கள் ஏலம் போகவில்லை!
ஐபிஎல் ஏலம் ஏன் வெளிநாட்டில்? இது தேசத் துரோகம் இல்லையா? பிசிசிஐ, பாஜகவை புரட்டியெடுத்த காங்கிரஸ்!