இதுக்கு போய் ஏன் அவுட் கொடுக்கல..? ஸ்டம்ப் மைக்கில் பிக்கப் ஆன இந்திய வீரரின் வாய்ஸ்

By karthikeyan VFirst Published Dec 27, 2020, 9:30 PM IST
Highlights

2வது டெஸ்ட் போட்டியில் டிம் பெய்னுக்கு தேர்டு அம்பயர் ரன் அவுட் கொடுக்காததையடுத்து, இதற்கு ஏன் அவுட் கொடுக்கவில்லை என்று இந்திய வீரர் அதிருப்தியை வெளிப்படுத்தியது, ஸ்டம்ப் மைக்கில் பதிவானது.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 195 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகளையும் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் அடித்துள்ளது. அபாரமாக ஆடி சதமடித்த கேப்டன் ரஹானே 104 ரன்களுடனும் ஜடேஜா 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்த போட்டியில் ஆஸி., அணியின் முதல் இன்னிங்ஸில் அந்த அணியின் கேப்டன் டிம் பெய்னுக்கு தேர்டு அம்பயர் ரன் அவுட் கொடுக்காத விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இன்னிங்ஸின் 55வது ஓவரை அஷ்வின் வீசினார். அந்த ஓவரில், க்றிஸ் க்ரீன் ஒரு பந்தை மிட் ஆஃப் திசையில் அடித்துவிட்டு ஒரு ரன் ஓடினார். ஆரம்பத்தில் அந்த ரன்னை மறுத்த கேப்டன் டிம் பெய்ன், பின்னர் ஓடினார். ஃபீல்டர் பந்தை பிடித்து விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிடம் வேகமாக த்ரோ அடிக்க, பந்தை பிடித்து ரன் அவுட் செய்தார் ரிஷப் பண்ட்.

மிகவும் க்ளோசான ரன் அவுட்டான இதில், முடிவெடுக்க தேர்டு அம்பயர் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டார். ரிஷப் பண்ட் பந்தை பிடித்து ஸ்டம்ப்பில் அடித்தபோது, டிம் பெய்ன் பேட் க்ரீஸுக்குள் நுழையவில்லை. ஆனால் க்ரீஸ் கோட்டில் பட்டிருந்தது. ஆனால் பேட்டிங் எந்த பகுதியில் க்ரீஸுக்குள் செல்லவில்லை. ஆனாலும் தேர்டு அம்பயர் மிகவும் க்ளோசான அதற்கு, நாட் அவுட் கொடுத்தார். 

இந்த விவகாரத்தில் இந்தியர்களும், ஆஸ்திரேலியர்களும் தங்களது வசதிக்கும் தேவைக்கும் ஏற்ப, வெவ்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து, டுவிட்டரில் இந்த ரன் அவுட் குறித்து விவாதித்தனர். ஆஸி., அணியின் முன்னாள் வீரர்களான ஷேன் வார்ன், பிராட் ஹாக் ஆகியோர், டிம் பெய்ன் அவுட் தான். தேர்டு அம்பயர் தவறுதலாக கொடுத்துவிட்டார். இந்திய அணியின் துரதிர்ஷ்டம் அது என்று டுவீட் செய்தனர்.

இந்நிலையில், இந்திய வீரர் ஒருவர், இதற்கு போய் ஏன் அவுட் கொடுக்கப்படவில்லை என்று அதிர்ச்சியுடன் கலந்த தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. அது யாருடைய குரல் என்று தெரியவில்லை.
 

click me!