டெல்லி அணியின் கேப்டன் ஷிகர் தவான்..!

Published : Dec 27, 2020, 08:16 PM IST
டெல்லி அணியின் கேப்டன் ஷிகர் தவான்..!

சுருக்கம்

சையத் முஷ்டாக் அலி தொடருக்கான டெல்லி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி அணியின் கேப்டனாக ஷிகர் தவான் அறிவிக்கப்பட்டுள்ளார்.  

உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் ஜனவரி 10ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாடு அணியெல்லாம் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இன்று டெல்லி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

42 வீரர்களை கொண்ட டெல்லி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல்லில் காயத்தால் பாதியில் வெளியேறிய இஷாந்த் சர்மா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்றுவந்த நிலையில், முழு உடற்தகுதியை பெறாததால், ஆஸி., சுற்றுப்பயணத்தில் இடம்பெற முடியாமல் போனது. 

இந்நிலையில், சையத் முஷ்டாக் அலி தொடருக்கான டெல்லி அணியில் இஷாந்த் சர்மா இடம்பெற்றுள்ளார். நிதிஷ் ராணா, பவன் நேகி, உன்முக்த் சந்த் ஆகியோரும் டெல்லி அணியில் இடம்பெற்றுள்ளனர்.

டெல்லி அணி:

ஷிகர் தவான்(கேப்டன்), இஷாந்த் சர்மா, நிதிஷ் ராணா, அனுஜ் ராவத், ஜாண்டி சித்து, க்‌ஷிதிஸ் ஷர்மா, ஹிம்மத் சிங், லலித் யாதவ், த்ருவ் ஷோரே, ஹித்தேன் தலால், பிரதீப் சங்வான், சிமர்ஜீத் சிங், சித்தாந்த் ஷர்மா, கன்வார், பிதூரி, விகாஸ் மிஷ்ரா, ஷிவான்க் வஷிஸ்த், மனன் ஷர்மா, மன்ஜோத் கல்ரா, குல்வாந்த் கெஜ்ரோலியா, பவன் நேகி, ஷிவம் ஷர்மா, ஆயுஷ் பதோனி, அன்கூர் கௌஷிக், யோகேஷ் நாகர், ரித்திக் கனோஜியா, உன்முக்த் சந்த், லக்‌ஷய் தரேஜா, பிரின்ஸ் சௌத்ரி, யதார்த் சிங், விநாயக் குப்தா, சர்தாக் ரஞ்சன், பிரியன்ஷ் ஆர்யா, அர்ச்சித் பக்‌ஷி, சனத் சங்வான், பிரதீப் மாலிக், வைபவ் ராவல், ஜத்தீன் யாதவ்.
 

PREV
click me!

Recommended Stories

முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!
U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!