பத்தாண்டின் சிறந்த ஒருநாள் அணியை அறிவித்தது ஐசிசி..! இந்திய வீரர்கள் ஆதிக்கம்.. கேப்டன் தோனி

By karthikeyan VFirst Published Dec 27, 2020, 4:48 PM IST
Highlights

பத்தாண்டின் சிறந்த ஒருநாள் அணியை ஐசிசி அறிவித்துள்ளது. 2011ல் உலக கோப்பையை வென்று கடந்த பத்தாண்டில் கோலோச்சிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை, பத்தாண்டின் சிறந்த ஒருநாள் அணிக்கான கேப்டனாக தேர்வு செய்துள்ளது.
 

கடந்த பத்தாண்டின் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளை ஐசிசி தேர்வு செய்து அறிவித்துள்ளது. பத்தாண்டின் சிறந்த ஒருநாள் அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரையும் ஐசிசி தேர்வு செய்துள்ளது. 2013ல் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதமடித்த ரோஹித், அதன்பின்னர் 2 இரட்டை சதங்களை அடித்தார்.

3ம் வரிசை வீரராக அந்த பேட்டிங் ஆர்டரின் அடையாளமாக திகழும், சமகாலத்தின் சிறந்த வீரரான கோலியையும் 4ம் வரிசைக்கு டிவில்லியர்ஸையும் தேர்வு செய்துள்ள ஐசிசி, ஆல்ரவுண்டர்களாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகியோரையும் தேர்வு செய்துள்ளது.

விக்கெட் கீப்பராக தோனியை தேர்வு செய்துள்ள ஐசிசி, அவரையே பத்தாண்டின் சிறந்த ஒருநாள் அணிக்கு கேப்டனாகவும் நியமித்தது. 

 2015 உலக கோப்பையின் தொடர் நாயகன் மிட்செல் ஸ்டார்க், டிரெண்ட் போல்ட் மற்றும் லசித் மலிங்கா ஆகிய மூவரையும், ஸ்பின்னராக தென்னாப்பிரிக்காவின் ரிஸ்ட் ஸ்பின்னர் இம்ரான் தாஹிரையும் தேர்வு செய்துள்ளது ஐசிசி.

ஐசிசி தேர்வு செய்த பத்தாண்டின் சிறந்த ஒருநாள் அணி:

ரோஹித் சர்மா, டேவிட் வார்னர், விராட் கோலி, டிவில்லியர்ஸ், ஷகிப் அல் ஹசன், தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், மிட்செல் ஸ்டார்க், டிரெண்ட் போல்ட், இம்ரான் தாஹிர், லசித் மலிங்கா.
 

click me!