டெஸ்ட் கிரிக்கெட்டில் 266 விக்கெட்டுகள் எடுத்த முன்னாள் இந்திய வீரர் பிஷன் சிங் பேடியின் விக்கெட்டுகள் சாதனையை ரவீந்திர ஜடேஜா முறியடித்துள்ளார்.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தற்போது ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 469 ரன்களும், இந்தியா 296 ரன்களும் எடுத்துள்ளன. இதன் மூலமாக 173 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா தற்போது 2ஆவது இன்னிங்ஸை ஆடி வருகிறது.
பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை 2023 ஹாக்கி: ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா!
இதில், டேவிட் வார்னர் ஒரு ரன்னிலும், உஸ்மான் கவாஜா 13 ரன்னிலும் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்னஷ் லபுஷேன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில், ஸ்டீவ் ஸ்மித் இறங்கி அடிக்க முற்பட்டு ரவீந்திர ஜடேஜா பந்தில் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். இதே போன்று டிராவிஸ் ஹெட்டும் ஆட்டமிழந்தார். அவர் 18 ரன்களில் வெளியேறினார்.
மைதானத்திலேயே அந்தர் பல்டி அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்: வைரலாகும் வீடியோ!
அடுத்து கேமரூன் க்ரீன் களமிறங்கினார். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 3ஆவது நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து க்ரீன் மற்றும் லபுஷேன் இருவரும் 4ஆவது நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஆனால், லபுஷேன் வந்த வேகத்தில் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடந்து க்ரீனும் 25 ரன்களில் வெளியேறினார்.
Ind vs Aus, WTC Final Day 4: மழை பெய்ய வாய்ப்பு: போட்டி பாதிக்கப்படுமா?
ஒரு கட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலமாக ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர் பிஷன் சிங் பேடியின் 266 விக்கெட்டுகள் சாதனையை முறியடித்துள்ளார். இந்தப் போட்டியுடன் 65 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 268 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
ஒரு லெப்ட் ஆர்ம் ஸ்பின்னராக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பேடியின் இந்த 266 விக்கெட்டுகள் சாதனையை ரவீந்திர ஜடேஜா ஒரு லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னராக 268 விக்கெட்டுகள் கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் எடுத்த லெப்ட் ஆர்ம் ஸ்பின்னர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
மைதானத்திலேயே அந்தர் பல்டி அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்: வைரலாகும் வீடியோ!