என்னை டி20 உலகக் கோப்பை வரை இருக்க சொன்னதற்கு ரோகித்துக்கு நன்றி – ராகுல் டிராவிட்டின் மறக்க முடியாத நினைவுகள்

By Rsiva kumar  |  First Published Jul 2, 2024, 3:00 PM IST

தனது வாழ்வில் மறக்க முடியாத நினைவுகளை கொடுத்ததற்கு நன்றி என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் தனது கடைசி உரையை டிரெஸிங் ரூமில் நிகழ்த்தி பிரியா விடை பெற்றார்.


இந்திய அணி 2ஆவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது. இது இந்திய அணிக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை சேர்த்தது. இந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிந்தது. இந்திய அணியின் சீனியர் ஜாம்பவான்களான விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா மூவரும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தனர்.

இந்த நிலையில் தான், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் தனது கடைசி நிமிட உரையை டிரெஸிங் ரூமில் நிகழ்த்தினார். அதில் அவர் கூறியிருப்பதாவது: வாழ்வில் மறக்க முடியாத நினைவில் தன்னையும் ஒரு பங்காளனாய் மாற்றியதற்கு நன்றி. நாம் எப்படி இந்த தொடரில் உழைத்தோம், எவ்வாறான தியாகங்களை செய்தோம் என்பதை நினைத்து இந்த ஒட்டுமொத்த நாடே பெருமை கொள்கிறது.

Latest Videos

நீங்கள் இந்த தொடரில் இடம் பெறுவதற்காக உங்களது குடும்பத்தினர், மனைவிகள், குழந்தைகள், சகோதர, சகோதரிகள், பயிற்சியாளர் என்று ஒவ்வொருவரும் தியாகம் செய்திருப்பார்கள். அவர்கள் எல்லாம் பெருமை கொள்ளும் விஷயமாக நீங்கள் தற்போது டிராபியை வென்று கொடுத்திருக்கிறீர்கள். இந்த டிராபியை வெல்வதற்காக நீங்கள் கடுமையாக உழைத்திருக்கிறீகள். அதற்கெல்லாம் நான் எப்படி நன்றி சொல்லப் போகிறேன் என்று தெரியவில்லை.

குறிப்பாக இந்த தொடரில் இருந்ததற்கு ரோகித் சர்மா தான் காரணம். என்னை நவம்பர் மாதம் தொடர்பு கொண்டு டி20 உலகக் கோப்பை தொடர் வரையில் பயிற்சியாளராக இருப்பதற்கு வற்புறுத்தினார். அவருடன் பயிற்சியாளராக பணியாற்றுவதை நான் பெருமையாக நினைக்கிறேன். ஒரு பயிற்சியாளராக நானும், கேப்டனாக ரோகித் சர்மாவும் இணைந்து பலமுறை ஒன்றாக நேரத்தை செலவிட்டு உரையாடியிருக்கிறோம்.

அதில் பல விஷயங்களை ஏற்றுக் கொண்டிருப்போம். சிலவை ஒத்துப் போகாமல் இருந்திருக்கும். நம்மை ஒன்றாக இணைத்து, நாம் கேட்டதெல்லாம் கொடுத்த பிசிசிஐக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல் டிராவிட்டின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு முறை கூட உலகக் கோப்பை டிராபியை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சச்சின் டெண்டுல்கர் கூட தோனி கேப்டனாக இருந்த போது 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

THE FINAL SPEECH BY WORLD CUP WINNING COACH RAHUL DRAVID. 🥺

- Thank you, Wall. 🇮🇳 pic.twitter.com/Lh1e6LQXEV

— Johns. (@CricCrazyJohns)

 

click me!