தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டும், 2ஆவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டும் கைப்பற்றி இந்திய மகளிர் வீராங்கனை சினே ராணா சாதனை படைத்துள்ளார்.
சென்னை, எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் கைப்பற்றிய சினே ராணா பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருது வென்று அசத்தியுள்ளார்.
யார் இந்த சினே ராணா?
undefined
சினே ராணா ஒரு வலது கை ஆஃப் பிரேக் ஸ்பின்னர். 30 வயதான அவர் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் மட்டுமின்றி ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதில் அவர் முறையே 29 மற்றும் 24 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளும், 2ஆவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளும் என்று மொத்தமாக 10 விக்கெட்டுகள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 விக்கெட்டுகள் எடுத்த 2ஆவது வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னதாக ஜூலான் கோஸ்வாமி 10 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 603 ரன்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து பாலோ ஆன் கொடுத்து 2ஆவது இன்னிங்ஸையும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி விளையாடியது. இதில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 373 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து 37 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய இந்திய மகளிர் அணியானது 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.