ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே எப்படி ஆண்டுதோறும் கோடிகளை சம்பாதிக்கிறார்?

By Rsiva kumar  |  First Published Jul 1, 2024, 8:08 PM IST

ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தேயின் நிகர சொத்து மதிப்பு மட்டும் ரூ.10 கோடி என்று தகவல் தெரிவிக்கின்றது.


ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா ஒரு ஸ்போர்ட்ஸ் மேனேஜர். இதன் காரணமாக ரோகித் சர்மாவின் தொழில் ரீதியிலான எல்லாவற்றையும் கவனித்து வருகிறார். மேலும், அவரது பிராண்ட் ஒப்புதல்கள் மற்றும் ஒப்பந்தம் எல்லாவற்றையும் திருமணத்திற்கு பின் ரித்திகா தான் கவனித்து வருகிறார். இந்த நிலையில் தான் ரித்திகாவின் நிகர சொத்து மதிப்பு மட்டும் ரூ.10 கோடி என்று தகவல் தெரிவிக்கின்றது.

ஆனால், இது விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவின் நிகர சொத்து மதிப்பை விட ரொம்பவே குறைவு. பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவின் நிகர சொத்து மதிப்பு ரூ.255 கோடி ஆகும். சினிமா, முதலீடு, விளம்பரம், பிராண்டு ஒப்பந்தம் ஆகியவற்றின் மூலமாக ஆண்டுக்கு ரூ.255 கோடி வரையில் வருமானம் ஈட்டி வருகிறார். ஆரம்பத்தில் விராட் கோலி, ரோகித் சர்மாவின் ஸ்போர்ட்ஸ் மேனேஜராக இருந்த ரித்திகா திருமணத்திற்கு பிறகு ரோகித் சர்மாவின் பிராண்டு ஒப்புதல், ஒப்பந்தம் ஆகியவற்றை கவனித்து வருகிறார். ஆனால், அவருக்கும் சினிமாவிற்கு எந்த தொடர்பும் இல்லை.

Latest Videos

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு டிராபி வென்று கொடுத்த ரோகித் சர்மாவின் நிகர சொத்து மதிப்பு ரூ.214 கோடி ஆகும். இது விராட் கோலியின் சொத்து மதிப்பை விட ரொம்பவே குறைவு. விராட் கோலியின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.1050 கோடி. பிசிசிஐ வருமானம், டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட், டி20 கிரிக்கெட் போட்டி சம்பளம், பிராண்டு ஒப்பந்தம், விளம்பரம், ஸ்டார்ட் அப் முதலீடு என்று பலவற்றின் மூலமாக விராட் கோலி வருமானம் ஈட்டி வருகிறார்.

ஆனால், ரோகித் சர்மா பிசிசிஐ வருமானம், டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட், டி20 கிரிக்கெட் போட்டி சம்பளம், பிராண்டு ஒப்பந்தம், ஐபிஎல் சம்பளம் ஆகியவற்றின் மூலமாக வருமானம் ஈட்டி வருகிறார். இதன் மூலமாக அவரது சொத்து மதிப்பு ரூ.214 கோடியாக உள்ளது. தற்போது ரோகித் சர்மா மற்றும் ரித்திகா சஜ்தே இருவரும் ஓர்லியில் உள்ள அஹூஜா டவரின் 29ஆவது மாடியில் உள்ள 4 பெட்ரூம், ஹால் மற்றும் கிச்சன் கொண்ட அபார்ட்மெண்டில் வசிக்கின்றன்ர. ரோகித் சர்மா ரூ.30 கோடி மதிப்பு கொண்ட 6000 சதுர அடி அபார்ட்மெண்ட்டில் முதலீடு செய்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!