இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் நடத்தப்பட்டு தற்போது இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் தான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் நடத்தப்பட்டு தற்போது இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் தான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிந்துள்ளது. ஆனால், அதற்கு முன்னதாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிந்த நிலையில் தான் டி20 உலகக் கோப்பை தொடருக்காக அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.
undefined
இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்தே இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு ரிக்கி பாண்டிங், மகிலா ஜெயவர்தனே, கவுதம் காம்பீர், விவிஎஸ் லட்சுமணன் ஆகியோரது பெயர் அடிபட்டது. ஆனால், ரிக்கி பாண்டிங் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் என்று அப்போது கூறப்பட்டது.
இதற்கிடையில் கடந்த மாதம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருக்கான நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. இதில், இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் தான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று கூறியுள்ளார். புதிய தலைமை பயிற்சியாளரும் இலங்கை தொடரின் மூலமாக தனது பணியை தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்:
ஜூலை 27 – இந்தியா – இலங்கை – முதல் டி20, இரவு 7 மணி
ஜூலை 29 - இந்தியா – இலங்கை – 2ஆவது டி20, இரவு 7 மணி
ஜூலை 31 - இந்தியா – இலங்கை – 3ஆவது டி20, இரவு 7 மணி
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்:
ஆகஸ்ட் 02 – இந்தியா – இலங்கை – முதல் ஒருநாள் போட்டி, பகல் 2.30 மணி
ஆகஸ்ட் 04 - இந்தியா – இலங்கை – 2ஆவது ஒருநாள் போட்டி, பகல் 2.30 மணி
ஆகஸ்ட் 07 - இந்தியா – இலங்கை – 3ஆவது ஒருநாள் போட்டி, பகல் 2.30 மணி
புதிய தலைமை பயிற்சியாளர் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியிருப்பதாவது: ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணிக்கு விவிஎஸ் லட்சுமணன் பயிற்சியாளராக செயல்படுவார். புதிய தலைமை பயிற்சியாளர் இலங்கை சுற்றுப்பயணத்தின் மூலம் பணியை மேற்கொள்வார் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.எஸ்.தோனிக்கு பிறகு டி20 உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றிய 2ஆவது வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். மேலும், 17 ஆண்டுகளுக்கு பிறகு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது டி20 உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றியது. என்னதான் டிராபியை வென்றது மகிழ்ச்சி அளித்தாலும் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அடுத்தடுத்த டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது.
புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்பவர், இந்திய அணியின் இளம் படையுடன் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.