முதுகில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வந்த பும்ரா உலகக் கிரிக்கெட்டின் உத்வேகம் – இர்பான் பதான் பாராட்டு!

Published : Jan 10, 2024, 01:16 PM IST
முதுகில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வந்த பும்ரா உலகக் கிரிக்கெட்டின் உத்வேகம் – இர்பான் பதான் பாராட்டு!

சுருக்கம்

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் இடம் பெற்ற 30 வயதான நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரரான ஜஸ்ப்ரித் பும்ராவை பாராட்டியுள்ளார்.

கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியவர் இர்பான் பதான். 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1305 ரன்களும், 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1544 ரன்களும், 24 டி20 போட்டிகளில் விளையாடி 172 ரன்களும் எடுத்துள்ளார். அதன் பிறகு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், கிரிக்கெட் வர்ண்னையாளர் திகழ்கிறார். இந்த நிலையில் தான் கடந்த ஆகஸ்ட் 2023 இல் இந்திய அணிக்கு மீண்டும் வந்த பும்ராவின் சிறப்பான அணுகுமுறையால் அவர் மீது ஈர்க்கப்பட்டுள்ளார்.  முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா ஜூலை 2022 முதல் ஆகஸ்ட் 2023 வரை விளையாடவில்லை. அந்த 13 மாத காலகட்டத்தில் அவர் செப்டம்பர் 2022 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு டி20 ஐ தொடரை மட்டுமே விளையாடினார்.

MS Dhoni Gym Work Out Video: ஜிம் ஒர்க் அவுட், பேட்டிங் பயிற்சின்னு பிஸியான தோனி – தரமான சம்பவம் இருக்கு!

"ஜஸ்ப்ரித் பும்ராவின் அணுகுமுறையை நான் காதலித்தேன், குறிப்பாக முதுகு அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் பந்துவீசிய விதம். அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டுமின்றி உலக கிரிக்கெட்டுக்கும் உத்வேகம் அளித்தவர்," என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பும்ராவைப் பாராட்டிய பதான் கூறினார்.

முதுகில் காயங்கள் இருந்தபோதிலும், டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்தியாவுக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற பும்ராவின் பற்றால் பதான் ஈர்க்கப்பட்டார். பதானின் கூற்றுப்படி, 30 வயதான இந்திய வேகப்பந்து வீச்சாளர் டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த பிராண்ட் தூதராக இருக்கிறார், மேலும் ஒவ்வொரு நாட்டிற்கும் அவரைப் போன்ற ஒரு பந்து வீச்சாளர் கிடைத்தால், விளையாட்டின் சிவப்பு-பந்து வடிவம் செழிக்கும்.

டெஸ்ட், ODI பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் ரோகித் சர்மா, விராட் கோலி முன்னேற்றம்!

அறுவை சிகிச்சைக்குப் பிறகும் சிவப்பு-பந்து கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளித்தால், பந்து வீச்சில் அவரை விட பெரிய பிராண்ட் அம்பாசிடரை நீங்கள் பெற முடியாது. ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற ஒரு பந்து வீச்சாளர் கிடைத்தால், டெஸ்ட் கிரிக்கெட் செழித்து வளரும்," என்று பதான் கூறினார்.

சமீபத்தில் முடிந்த தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பும்ரா விளையாடி அதிக விக்கெட் எடுத்தவர் என்ற சாதனையை படைத்தார். இரண்டு போட்டிகளில், அவர் மொத்தம் 12 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடர் நாயகன் விருதை வென்றார். வெளிநாட்டு டெஸ்டில் விளையாடுவதற்கு முன்பு, பும்ரா 2023 ODI உலகக் கோப்பையில் 11 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

அலீசா ஹீலி சிறப்பான பேட்டிங் – 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி, 2-1 என்று தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலியா சாதனை!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

Ind Vs Pak டி20 உலகக் கோப்பை: வெறும் ரூ.100க்கு விற்கப்படும் டிக்கெட்டுகள்.. நீங்க வாங்கீட்டீங்களா.?
சுப்மன் கில்லை உடனே தூக்குங்க! கம்பீருக்கு எதிராக ரசிகர்கள் கொந்தளிப்பு! சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு!