இந்தியா பேட்டிங் ஆடுவதை பார்ப்பதற்கு 7 மணி நேரம் டிராவல் செய்து வந்திருக்கிறேன், ஆகையால் ஷாஹீன் அஃப்ரிடி கொஞ்சம் மெதுவாக பந்து வீசுங்கள் என்பது போன்று ரசிகர் ஒருவர் பதாகை ஒன்றை காண்பித்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியானது மழையால் பாதிக்கப்பட்டது. ஆகையால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது. ஆனால், இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதில், முன்வரிசை வீரர்கள் என்று சொல்லப்படும் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்டியா மற்றும் இஷான் கிஷான் நிலைத்து நின்று ஆடாவிட்டால் இந்தியா 100 ரன்களுக்கு ஆட்டமிழந்திருக்கும்.
இந்த நிலையில், தான் அதற்கு பழிதீர்க்கும் வகையில் இந்திய அணிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்று போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்தப் போட்டியில் மழை குறுக்கீடு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனினும், போட்டியானது மழையால் பாதிக்கப்பட்டால் ரிசர்வ் டே என்று சொல்லப்படும் அடுத்த நாள் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு புறம் இருக்க, பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அஃப்ரிடியிடம் இந்திய ரசிகர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார். அதாவது, ஷாஹீன் பாய், இந்திய அணியின் பேட்டிங்கை பார்ப்பதற்காக 7 மணி நேரம் பயணம் செய்து வந்திருக்கிறேன். ஆகையால், நீங்கள் பார்த்து மெதுவாக வீசுங்கள் என்று பதாகை ஒன்றை காண்பித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
IND vs PAK, Super 4: கேஎல் ராகுல்? இஷான் கிஷான்? யாருக்கு இடம் கிடைக்கும்?