RSA vs AUS: 15 நாட்களில் நடந்த மாற்றம்: பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடம் பிடித்த ஆஸ்திரேலியா!

By Rsiva kumar  |  First Published Sep 10, 2023, 12:15 PM IST

ஐசிசி ஒரு நாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா 121 புள்ளிகளுடன் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது.


தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா முதலில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், ஏற்கனவே நடந்து முடிந்த முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IND vs PAK, Super 4: கேஎல் ராகுல்? இஷான் கிஷான்? யாருக்கு இடம் கிடைக்கும்?

Tap to resize

Latest Videos

இதைத் தொடர்ந்து நேற்று இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடியது. இதில், டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி முதல் விக்கெட்டிற்கு 109 ரன்கள் குவித்தனர். டிராவிஸ் ஹெட் 36 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சர்கள் உள்பட 64 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

India vs Pakistan Super Fours: பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியின் பிளேயிங் 11 எப்படி இருக்கும்?

ஒருபுறம் நிதானமாக விளையாடி வந்த டேவிட் வார்னர் 93 பந்துகளில் 12 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 106 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக சர்வதேச போட்டிகளில் டேவிட் வார்னர் தனது 46ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். அதுமட்டுமின்றி தொடக்க வீரராக அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், ஒரு தொடக்க வீரராக 140 இன்னிங்ஸில் 6000 ரன்களையும் வார்னர் கடந்துள்ளார்.

Sri Lanka vs Bangladesh Super Fours: வங்கதேசத்தை வீழ்த்தி 13ஆவது வெற்றி பெற்று சாதனை படைத்த இலங்கை!

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக பவர்பிளே ஓவரில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்கள் எடுத்த முதல் அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது. அடுத்து வந்த மார்னஸ் லபுஷேன் 99 பந்துகளில் 19 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 124 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 392 ரன்கள் குவித்தது.

IPL 2024: கௌதம் காம்பீர் விலக வாய்ப்பில்லை – ஆலோசகராக தொடர்வார் – லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் நிர்வாகம்!

பின்னர், கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணிக்கு குயிண்டன் டி காக் 45 ரன்களும், டெம்பா பவுமா 46 ரன்களும், ஹென்றிச் கிளாசென் 49 ரன்களும், டேவிட் மில்லர் 49 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே தென் ஆப்பிரிக்கா இறுதியாக 41.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் மட்டுமே எடுத்து 123 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ஆஸ்திரேலியா 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

India vs Pakistan Super 4: நாய்க்குடியுடன் கால்பந்து விளையாடிய விராட் கோலி; வைரலாகும் வீடியோ!

இந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அதிக புள்ளிகள் பெற்று ஐசிசி ஆண்கள் ஒரு நாள் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடம் பெற்றிருந்தது. ஆனால், தற்போது தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் 2 ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 121 புள்ளிகள் பெற்று ஐசிசி ஆண்கள் ஒரு நாள் கிரிகெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா நம்பர் 1 அணியாக முன்னேறியுள்ளது.

பாகிஸ்தான் 120 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும், இந்தியா 114 புள்ளிகள் உடன் 3ஆவது இடத்திலும் உள்ளது.

click me!