இந்தியாவிற்கு எதிரான சூப்பர் 4 சுற்று போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பீல்டிங் தேர்வு செய்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று போட்டி இன்று நடக்கிறது. கொழும்புவில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பீல்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்திய அணி பேட்டிங் ஆட உள்ளது.
இந்திய அணியில் முதல் 2 போட்டிகளில் இடம் பெறாத கேஎல் ராகுல் இந்தப் போட்டியில் இடம் பெற்றுள்ளார். ஆனால் ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. எனினும், பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய இடது கை பேட்ஸ்மேனான இஷான் கிஷானுக்கு இந்தப் போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், முகமது ஷமி இடம் பெறவில்லை. நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் இடம் பெறாத பும்ரா இந்தப் போட்டியின் மூலமாக அணிக்கு திரும்பியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் பட்ட அவமானத்திற்கு இந்தப் போட்டியில் இந்திய அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
IND vs PAK, Super 4: கேஎல் ராகுல்? இஷான் கிஷான்? யாருக்கு இடம் கிடைக்கும்?
இந்தியா
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்
பாகிஸ்தான்:
ஃபஹர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), அகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், பாஹீம் அஷ்ரப், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, ஹரீஷ் ராஃப்
இதுவரையில் பாகிஸ்தான் விளையாடிய போட்டிகளில் ஒரு போட்டியில் கூட தோற்றதில்லை. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டியானது மழையால் ரத்து செய்யப்பட்டது.
India vs Pakistan Super Fours: பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியின் பிளேயிங் 11 எப்படி இருக்கும்?