யூடியூப் சேனலுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்த யுஸ்வேந்திர சாஹல்!

By Rsiva kumar  |  First Published Jun 19, 2023, 12:50 PM IST

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் ஒரு நல்ல காரணத்திற்காக யூடியூப் சேனல் ஒன்றிற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.


ஹரியானாவின் ஜிந்த் பகுதியில் பிறந்தவர் யுஸ்வேந்திர சாஹல். அதன் பிறகு உள்ளூர் போட்டிகளில் விளையாடி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி கடைசியாக இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் 72 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 121 விக்கெட்டுகளும், 75 டி20 போட்டிகளில் விளையாடி 91 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடினார்.

டைவ் அடித்து கேட்ச் பிடித்த முருகன் அஸ்வின்; அப்படியிருந்தும் தோல்வி அடைந்த சீகம் மதுரை பாந்தர்ஸ்!

Tap to resize

Latest Videos

தற்போது ஓய்வில் இருக்கும் யுஸ்வேந்திர சாஹல், அடுத்து ஆசிய கோப்பை, ஒரு நாள் உலகக் கோப்பை தொடர்களில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், யுஸ்வேந்திர சஹால் யூடியூப் சேனல் ஒன்றிற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

டிஎன்பிஎல் தொடரில் 1500 ரன்களை கடந்து கௌசிக் காந்தி சாதனை!

சோல் ரெகால்டோஸ் இந்தியாவைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் வீரர். அவர் தனது பிஜிஎம்ஐ மொபைல் கேம்ப்ளேக்காக பிரபலமானவர். இளம் வயது முதல் வீடியோ கேம் விளையாடி வந்த சோல் ரெகால்டோஸ், அதன் பிறகு போட்டி கேமிங்கில் ஆர்வம் காட்டினார். கடந்த 2018 ஆம் ஆண்டு அவர் சோல் S8UL என்ற ஸ்போர்ட்ஸ் டீமில் சேர்ந்தார். நாளடைவில் அவர் இந்தியாவில் மிகவும் பிரபலமான BGMI பிளேயர்களில் ஒருவராக வலம் வந்தார். அவரது யூடியூப் சேனலில் 2.29 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இருக்கின்றனர்.

2ஆவது தோல்வியை தழுவிய மதுரை பாந்தர்ஸ்: பாபா இந்திரஜித் அதிரடியால் திண்டுக்கல் வின்!

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உதவும் வகையில் பிரதமரின் PM-CARESக்கு ரூ.60 ஆயிரம் நிதியுதவி அளித்தார். இதே போன்று, லடாக்கில் இந்திய ராணுவப் பணிக்காக ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்தார்.  இவ்வளவு ஏன், கடந்த ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ. 50,000 நன்கொடையாக வழங்கினார்.

சுபோத் குமார் வேகத்தில் சுருண்ட சீகம் மதுரை பாந்தர்ஸ்: கடைசி வரை போராடிய கௌசிக்!

அவர், S8UL குழுவுடன் சேர்ந்து, You Tube சேனல்களில் திறந்த தொண்டு நிறுவனத்தை வைத்திருக்கிறார். இந்த விதிவிலக்கான முயற்சியைப் பார்த்து, யுஸ்வேந்திர சாஹல், பர்வ் சிங்குடைய யூடியூப் சேனலுக்கு ரூ. லட்சத்தை நன்கொடையாக அளித்துள்ளார். இதற்கு முன்னதாக ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரேயோரு இன்ஸ்டா போஸ்டுக்கு ரூ.8.9 கோடி, டுவிட்டர் பதிவிற்கு ரூ.2.5 கோடி வருமானம் ஈட்டும் விராட் கோலி!

click me!