ஒரே ஒரு வீட்டை குத்தகைக்கு தான் விட்டாரு – ஆட்டோமேட்டிக்கா ரூ.1.27 கோடி வரையில் சம்பாதிக்கும் விராட் கோலி!

By Rsiva kumar  |  First Published Mar 9, 2024, 12:14 PM IST

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு குருகிராம் சொகுசு வீடு குத்தகை ஒப்பந்தம் மூலமாக வருடத்திற்கு ரூ.1.27 கோடி வரையில் வருமானம் வந்து கொண்டிருக்கிறது.


சினிமா முதல் கிரிக்கெட் பிரபலங்கள் வரையிலும் வீடு மற்றும் நிலத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பிரபல தொழிலதிபர்களும் கூட நிலங்களில் முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி குருகிராமில் ரூ.80 கோடி மதிப்பில் சொகுசு பங்களா ஒன்றை கடந்த சில வருடங்களுக்கு முன்பு வாங்கியிருக்கிறார். சுமார் 18,430 சதுர அடி பரப்பிலான இந்த சொகுசு பங்களாவை Mynd Integrated Solutions Pvt Ltd நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டுள்ளார்.

இதன் மூலமாக விராட் கோலிக்கு வருடத்திற்கு ரூ.1.27 கோடி வரையில் வாடகை வருவதாக சிஆர்இ மேட்ரிக்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குருகிராமிலுள்ள ரீச் கொமர்சியா நிறுவன டவரில் 18,430 சதுர அடி பரப்பளவில் உள்ள 12 இடங்களை அலுவலக பயன்பாட்டிற்காக குத்தகைக்கு விட்டிருக்கிறார். மாதம் ரூ.8.85 லட்சம் வீதம் வாடகை என்று ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.

Tap to resize

Latest Videos

அதோடு பதிவுக் கட்டணமாக ரூ.50,010 உடன் ரூ.3.83 லட்சம் முத்திரைக் கட்டணம் செலுத்தப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி முத்திரைக் கட்டணம் பதிவு செய்யப்பட்டாலும், ஒப்பந்தத்திற்கான ஆவணங்கள் மார்ச் 2024 வரையில் முடிக்கப்படவில்லை. ஒப்பந்த அடிப்படையில் வாடகைப் பணம் கடந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி தொடங்கியது. ஆவணங்களின் படி வருடத்திற்கு 5 சதவிகிதம் வரையில் வாடகையில் உயர்வு இருக்கும். இதன் அடிப்படையில் பார்த்தால் விராட் கோலிக்கு வருடத்திற்கு ரூ.1.27 கோடி வரையில் குருகிராம் சொகுசு பங்களா குத்தகை ஒப்பந்தம் மூலமாக வாடகை வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!