இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 சுற்று போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்றின் 3ஆவது போட்டியில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து தற்போது இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 4ஆவது போட்டி நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியைப் பொறுத்த வரையில் ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக அக்ஷர் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.
இலங்கை:
பதும் நிசாங்கா, திமுத் கருணாரத்னே, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சதீரா சமரவிக்ரமா, சரித் அசலங்கா, தனஞ்சயா டி சில்வா, தசுன் ஷனாகா (கேப்டன்), துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ரஜிதா, மதீஷா பதிரனா
IND vs SL: சூப்பர் 4 ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட்டில் இந்தியா – இலங்கை பலப்பரீட்சை!
இதுவரையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய 165 ஒரு நாள் போட்டிகளில் இந்தியா 96 போட்டிகளிலும், இலங்கை 57 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில், 11 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. இதில், ஹோம் மைதானத்தில் 39 போட்டியிலும், அவே மைதானத்தில் 30 போட்டியிலும், பொதுவான இடங்களில் நடத்தப்பட்ட போட்டியில் இந்தியா 27 போட்டிகளிலும் என்று மொத்தமாக 96 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.
இலங்கை தொடர்ந்து 13 ஒரு நாள் போட்டி வெற்றி:
இதுவே, இலங்கை அதனுடைய சொந்த மைதானத்தில் நடந்த 28 போட்டிகளிலும், அவே மைதானங்களில் 12 போட்டிகளிலும் பொதுவான இடங்களில் நடத்தப்பட்ட 17 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. மேலும், இலங்கை கடைசியாக நடந்த 13 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறது. இந்த சாதனையை இந்தியா முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Pakistan vs India Super Fours 3rd Match: பாகிஸ்தானுக்கு எதிராக ஆசிய கோப்பையில் இந்தியா சாதனை வெற்றி!