சொந்த மண்ணில் சாதித்து காட்டிய இந்தியா: இலங்கைக்கு எதிராக 19 வெற்றி!

Published : Jan 08, 2023, 10:11 AM IST
சொந்த மண்ணில் சாதித்து காட்டிய இந்தியா: இலங்கைக்கு எதிராக 19 வெற்றி!

சுருக்கம்

இலங்கை அணிக்கு எதிராக நடந்த 29 டி20 போட்டிகளில் இந்தியா 19ல் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி முதலில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர். நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து நடந்த 2ஆவது டி20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 1-1 என்று சமன் செய்தது.

IND vs SL 3rd T20: இந்தியா நிகழ்த்திய அற்புதங்கள் என்னென்ன?

இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இஷான் கிஷான் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி சிறிது நேரம் அதிரடி காட்டினார். அவர் 16 பந்துகளில் 2 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் உள்பட 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார்.

அர்ஷ்தீப் சிங் அருமையான பவுலிங்..! இலங்கையை சொற்ப ரன்களுக்கு பொட்டளம் கட்டி டி20 தொடரை வென்றது இந்தியா

இவர், இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களை திணற வைத்தார். ஒவ்வொரு பந்துகளையும் சிக்சருக்கும் பவுண்டரிக்கும் விரட்டி விரட்டி அடித்தார். மைதானத்தின் அனைத்து மூலைகளிலும் சூர்யகுமார் விளாசும் பந்துகள் தான் பறந்தன. அப்படியே அதிரடி காட்டி ஆடிய சூர்ய குமார் யாதவ் அதிவேகமாக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 2ஆவது இடம் பிடித்தார். இவர் 45 பந்துகளில் 100 ரன்கள் குவித்தார். இதற்கு முன்னதாக ரோகித் சர்மா 35 பந்துகளில் சதம் அடித்திருந்தார். கே எல் ராகுல் 46 பந்துகளில் சதம் அடித்திருந்தனர். சூர்யகுமார் யாதவ்வே இங்கிலாந்து அணிக்கு எதிராக 48 பந்துகளிலும், நியூசிலாந்து அணிக்கு எதிராக 49 பந்துகளிலும் சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை பவுலிங்கை அடித்து வெளுத்து டி20யில் 3வது சதமடித்தார் சூர்யகுமார் யாதவ்..! இலங்கைக்கு மிகக்கடின இலக்கு

ஒருபுறம் நிதானமாக ஆடிய சுப்மன் கில் டி20 போட்டியில் தனது முதல் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். அவர் 36 பந்துகளில் 3 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 4 ரன்னிலும், தீபக் கூடா 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக வந்த அக்‌ஷர் படேல் தன் பங்கிற்கு 9 பந்துகளில் 4 பவுண்டரிகள் உள்பட 21 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 9 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் உள்பட 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் குவித்தது.

இதுதான் ஒருநாள் உலக கோப்பைக்கான எனது இந்திய அணி.. அவங்க 2 பேருக்கும் கண்டிப்பா இடம் இல்ல..! ஸ்ரீகாந்த் அதிரடி

இதையடுத்து கடின இலக்கை துரத்திய இலங்கை அணியில் ஒவ்வொரு வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், 13 ரன்கள் எக்ஸ்ட்ரா மூலமாக வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா சார்பில் பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா, உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாகல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், அக்‌ஷர் படேல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.

பயிற்சியில் நோ பால் வீசி பழக்கப்பட்டதுதான் காரணம்..! அர்ஷ்தீப் சிங், பவுலிங் கோச்சை விளாசிய கம்பீர்

இந்த வெற்றியின் மூலம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதுமட்டுமின்றி சொந்த மண்ணில் இலங்கை அணிக்கு எதிராக நடந்த 29 போட்டிகளில் இந்திய அணி 19 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதோடு, இலங்கை அணி ஒரு தொடரை கூட இதுவரை கைப்பற்றியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!