IND vs SA: 3வது டி20 டாஸ் ரிப்போர்ட்.. இந்திய அணியில் 3 அதிரடி மாற்றங்கள்

By karthikeyan V  |  First Published Oct 4, 2022, 6:50 PM IST

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
 


இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி முதல் முறையாக இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்று சாதனை படைத்தது.

இந்நிலையில், கடைசி டி20 போட்டி இன்று இந்தூரில் நடக்கிறது. இந்த போட்டி தான் இந்திய அணிக்கு டி20 உலக கோப்பைக்கு முந்தைய கடைசி போட்டி என்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற்று நல்ல முமெண்ட்டத்துடன் டி20 உலக கோப்பைக்கு செல்லவேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. ஏற்கனவே தொடரை இழந்துவிட்ட தென்னாப்பிரிக்க அணி ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க - டி20 கிரிக்கெட்டின் டாப் 5 வீரர்கள்.. ஆடம் கில்கிறிஸ்ட்டின் அதிரடி தேர்வு..! நம்பர் 1 இடத்தில் இந்திய வீரர்

இந்தூரில் நடக்கும் 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டிக்கான இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அர்ஷ்தீப் சிங்கிற்கு லேசான முதுகு வலி என்பதால் முன்னெச்சரிக்கையாக அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

ஷ்ரேயாஸ் ஐயர், உமேஷ் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகிய மூவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். கேஎல் ராகுல் ஆடாததால் ரோஹித்துடன் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக ஆடுகிறார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், உமேஷ் யாதவ், முகமது சிராஜ். 

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையிலிருந்து விலகிய பும்ராவின் உருக்கமான மெசேஜ்
 
தென்னாப்பிரிக்க அணி:

டெம்பா பவுமா (கேப்டன்), டி காக் (விக்கெட் கீப்பர்), ரைலீ ரூசோ, எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், வெய்ன் பர்னெல், ட்வைன் பிரிட்டோரியஸ், கேஷவ் மஹராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி.
 

click me!