மகளிர் ஆசிய கோப்பை: அமீரக அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

Published : Oct 04, 2022, 05:37 PM IST
மகளிர் ஆசிய கோப்பை: அமீரக அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

சுருக்கம்

மகளிர் ஆசிய கோப்பை தொடரில் ஐக்கிய அரபு அமீரக அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.  

மகளிர் ஆசிய கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடந்துவருகிறது. இந்திய மகளிர் அணி முதல் 2 போட்டிகளில் இலங்கை மற்றும் மலேசியா அணிகளை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நிலையில், இன்றைய போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டு ஆடியது. சில்ஹெட்டில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

இதையும் படிங்க - டி20 கிரிக்கெட்டின் டாப் 5 வீரர்கள்.. ஆடம் கில்கிறிஸ்ட்டின் அதிரடி தேர்வு..! நம்பர் 1 இடத்தில் இந்திய வீரர்

இந்திய மகளிர் அணி:

சபினேனி மேகனா, ஸ்மிரிதி மந்தனா (கேப்டன்), ரிச்சா கோஷ்(விக்கெ கீப்பர்), கிரன் நவ்கிரே, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தயாளன் ஹேமலதா, பூஜா வஸ்ட்ராகர், ஸ்னே ராணா, தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், ராஜேஷ்வரி கெய்க்வாட்.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகள் ரிச்சா கோஷ்  ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீராங்கனை மேகனா 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹேமலதா 2 ரன்களுக்கு அவுட்டானார்.

3ம் வரிசையில் இறங்கிய தீப்தி ஷர்மா அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 49 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 64 ரன்கள் அடித்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிய ஜெமிமா 45 பந்தில் 11 பவுண்டரிகளுடன் 75 ரன்களை குவிக்க, இந்திய மகளிர் அணி 20 ஓவரில் 178 ரன்களை குவித்தது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையிலிருந்து விலகிய பும்ராவின் உருக்கமான மெசேஜ்

179 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய ஐக்கிய அரபு அமீரக அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது. ஆனால் 20 ஓவரில் அந்த அணி 74 ரன்கள் மட்டுமே அடித்து 104 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அந்த அணியின் கவிஷா அதிகபட்சமாக 30 ரன்கள் அடித்தார். ஆனால் 54 பந்தில் அவர் 30 ரன்கள் அடித்தார். 

இந்திய மகளிர் அணி ஆசிய கோப்பையில் தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகியாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.
 

PREV
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?