டி20 கிரிக்கெட்டின் டாப் 5 வீரர்கள்.. ஆடம் கில்கிறிஸ்ட்டின் அதிரடி தேர்வு..! நம்பர் 1 இடத்தில் இந்திய வீரர்

டி20 கிரிக்கெட்டின் மிகச்சிறந்த 5 வீரர்களை ஆடம் கில்கிறிஸ்ட் தேர்வு செய்துள்ளார். கில்கிறிஸ்ட்டின் தேர்வில் ஒரு இந்திய வீரரும் இடம்பிடித்துள்ளார்.
 

adam gilchrist selects top 5 cricketers of t20 cricket

டி20 உலக கோப்பை தொடர் வரும் 16ம் தேதி முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. 

இந்நிலையில், டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த 5 வீரர்களை தேர்வு செய்துள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட். 

Latest Videos

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் பும்ராவுக்கு மாற்று வீரர்..! இவர்களில் மூவரில் யார்..?

ஐசிசி அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் இதுகுறித்து பேசிய ஆடம் கில்கிறிஸ்ட், ஹர்திக் பாண்டியா மிகச்சிறந்த கிரிக்கெட்டர். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து வகையிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கி, எண்டர்டெய்ன் செய்யக்கூடியவர். அவர் தான் எனது நம்பர் 1 செலக்‌ஷன்.

அடுத்தது டேவிட் வார்னர். அவரது அதிரடியான அணுகுமுறை பார்க்க அருமையாக இருக்கும். ஓபனிங்கில் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுக்கக்கூடியவர். 

3வது வீரர் பாபர் அசாம். அனைத்துவிதமான ஃபார்மட்டிலும் அருமையாக ஆடக்கூடிய வீரர். டி20 கிரிக்கெட்டில் எல்லாவிதமான கண்டிஷனிலும் சிறப்பாக பேட்டிங் ஆடும் வீரர்.

4வது வீரர் ரஷீத் கான். உலகளவில் டி20 கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர் ரஷீத் கான். கடந்த 10 ஆண்டுகளில் அவர்தான் டி20 கிரிக்கெட்டில் கோலோச்சுகிறார். 

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் பும்ரா ஆடாததுலாம் இந்தியாவுக்கு பெரிய பிரச்னையே இல்ல..! கெத்தான காரணம் கூறும் வாரிசு வீரர்

அடுத்தது ஜோஸ் பட்லர். பவரான மற்றும் துணிச்சலான வீரர் பட்லர். அவர் அடித்து ஆட ஆரம்பித்துவிட்டால் ஆட்டம் முடிந்தது என்று கில்கிறிஸ்ட் தெரிவித்தார்.
 

vuukle one pixel image
click me!
vuukle one pixel image