டி20 உலக கோப்பையில் பும்ராவுக்கு மாற்று வீரர்..! இவர்களில் மூவரில் யார்..?

By karthikeyan VFirst Published Oct 3, 2022, 10:52 PM IST
Highlights

டி20 உலக கோப்பையிலிருந்து காயத்தால் விலகியுள்ள ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு பதிலாக 3 ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் எடுக்கப்படுவார். அவர்கள் மூவரை பற்றியும் பார்ப்போம்.
 

டி20 உலக கோப்பை நெருங்கும் நிலையில், அதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. ரோஹித், ராகுல், கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் என இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மிக வலுவாக இருப்பதுடன், நன்றாக செட்டும் ஆகிவிட்டது.

இந்திய அணியின் ஸ்பின் ஆல்ரவுண்டர் ஜடேஜா காயத்தால் டி20 உலக கோப்பையில் ஆடவில்லை என்றாலும், அவர் மாதிரியான ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல் இருக்கிறார். அஷ்வின், சாஹல் என தரமான ஸ்பின் பவுலிங் யூனிட்டும் உள்ளது.

இதையும் படிங்க - IND vs SA: 3வது டி20 போட்டியில் பெரிய தலைகளுக்கு ஓய்வு..! உத்தேச இந்திய அணி

ஃபாஸ்ட் பவுலிங் தான் பிரச்னையாக உள்ளது. புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் ஆகியோர் டெத் ஓவர்களில் அண்மைக்காலமாக அதிகமான ரன்களை வழங்கிவருகின்றனர். இந்நிலையில், பவர்ப்ளே, மிடில் ஓவர்கள், டெத் ஓவர்கள் என ஆட்டத்தின் அனைத்து சூழல்களிலும் அபாரமாக பந்துவீசக்கூடிய ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக டி20 உலக கோப்பையில் ஆடவில்லை. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு.

பும்ராவிற்கு மாற்று வீரராக யார் எடுக்கப்படுவார் என்பது பெரிய கேள்வியாக உள்ளது. முகமது ஷமி, தீபக் சாஹர், முகமது சிராஜ் ஆகிய மூவரில் ஒருவர் பும்ராவிற்கு மாற்று வீரராக எடுக்கப்படுவார். ஷமி மற்றும் தீபக் சாஹர் ஆகிய இருவரும் ரிசர்வ் வீரர்களாக இருப்பதால் அவர்கள் இருவரில் ஒருவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஷமி கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பைக்கு பின் ஒரு டி20 போட்டியில் கூட ஆடவில்லை என்றபோதிலும் சீனியர் வீரர். அதுமட்டுமல்லாது ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அபாரமாக பந்துவீசியிருக்கிறார்.

தீபக் சாஹர் நன்றாக ஸ்விங் செய்து வீசக்கூடியவர். பெரும்பாலும் பவர்ப்ளேயில் புதிய பந்தில் நன்றாக வீசக்கூடியவர். ஆனால் டெத் ஓவர்களில் பொதுவாக அதிகமாக வீசமாட்டார். வீசினாலும் அதிக ரன்களை வழங்குவார். ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் களத்தில் செட்டில் ஆன மில்லர் மற்றும் டி காக் நின்றபோதிலும் கட்டுக்கோப்பாக பந்துவீசி கவனம் ஈர்த்தார். எனவே தீபக் சாஹரும் நல்ல ஆப்சனாக இருப்பார்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் பும்ரா ஆடாததுலாம் இந்தியாவுக்கு பெரிய பிரச்னையே இல்ல..! கெத்தான காரணம் கூறும் வாரிசு வீரர்

முகமது சிராஜ் நல்ல வேகத்தில் ஸ்விங்கும் செய்யக்கூடிய பவுலர். அதுமட்டுமல்லாது உயரமான பவுலர் என்பதால் நன்றாக பவுன்ஸ் ஆகக்கூடிய ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவார். எனவே இவர்கள் மூவரில் யார் வேண்டுமானாலும் பும்ராவிற்கு மாற்றுவீரராக எடுக்கப்படலாம். மூவருமே நல்ல ஆப்சன் தான் என்பதால் பிரச்னையில்லை.
 

click me!