
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால் 1-1 என தொடர் சமனடைந்தது.
தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் இன்று நடக்கிறது. இரு அணிகளுமே இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளன.
இதையும் படிங்க - விராட் கோலியை நீக்குமளவிற்கு தில்லான தேர்வாளர் இந்தியாவில் பிறக்கவே இல்ல
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா.
இதையும் படிங்க - அந்த ஷாட்டை மொத்தமாவே தடை செய்யணும்..! அஷ்வின் கருத்துக்கு வலுசேர்க்கும் ஸ்காட் ஸ்டைரிஸ்
இங்கிலாந்து அணி:
ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, க்ரைக் ஓவர்டன், டேவிட் வில்லி, ப்ரைடன் கர்ஸ், ரீஸ் டாப்ளி.