ENG vs IND: 2வது ஒருநாள் போட்டி டாஸ் ரிப்போர்ட்.. இந்திய அணியில் கோலி கம்பேக்

Published : Jul 14, 2022, 05:16 PM IST
ENG vs IND: 2வது ஒருநாள் போட்டி டாஸ் ரிப்போர்ட்.. இந்திய அணியில் கோலி கம்பேக்

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.

2வது ஒருநாள் போட்டி இன்று லண்டன் லார்ட்ஸில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையும் படிங்க - ஓய்வு என்ற பெயரில் ஓரங்கட்டப்பட்ட விராட் கோலி..? முடிவுக்கு வரும் டி20 கெரியர்..?

கடந்த போட்டியில் காயம் காரணமாக ஆடாத விராட் கோலி, இந்த போட்டியில் ஆடுகிறார். அதனால் ஷ்ரேயாஸ் ஐயர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் இந்த ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா.

இதையும் படிங்க - ரோஹித் சர்மா மாபெரும் சாதனை.. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் டாப் இந்திய வீரர்..! சர்வதேச அளவில் 4ம் இடம்

இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, க்ரைக் ஓவர்டன், டேவிட் வில்லி, ப்ரைடன் கர்ஸ், ரீஸ் டாப்ளி.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: மாஸ் காட்டும் பாண்டியா.. 3வது T20யில் படைக்கப்போகும் புதிய சாதனை
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாடும் விராட் கோலி..! ரசிகர்களுக்கு குட் நியூஸ்!