SL vs PAK: பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Published : Jul 14, 2022, 03:15 PM IST
SL vs PAK: பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

சுருக்கம்

பாகிஸ்தானுக்கு எதிரான  டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஆஸ்திரேலிய அணி அண்மையில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அந்த தொடர் 1-1 என சமனடைந்தது.

முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 39 ரன்கள் ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்று 1-1 என தொடரை சமன் செய்தது.

இதையும் படிங்க - WI vs IND: டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! கேஎல் ராகுல் கம்பேக்.. அஷ்வினுக்கு மீண்டும் டி20 அணியில் இடம்

அடுத்ததாக பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இலங்கை - பாகிஸ்தான் இடையே 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. முதல் போட்டி வரும்16ம் தேதி தொடங்குகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றி உத்வேகத்துடன் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இலங்கை அணி. 

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. திமுத் கருணரத்னே தலைமையில் 18 வீரர்களை கொண்ட இலங்கை டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - 2023ல் இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா ஆடமுடியாது..? இதுதான் காரணம்

இலங்கை டெஸ்ட் அணி:

திமுத் கருணரத்னே (கேப்டன்), பதும் நிசாங்கா, ஒஷாடா ஃபெர்னாண்டோ, ஆஞ்சலோ மேத்யூஸ், குசால் மெண்டிஸ், தனஞ்செயா டி சில்வா, காமிந்து மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), தினேஷ் சண்டிமால், ரமேஷ் மெண்டிஸ், மஹீஷ் தீக்‌ஷனா, காசுன் ரஜிதா, விஷ்வா ஃபெர்னாண்டோ, அசிதா ஃபெர்னாண்டோ, தில்ஷான் மதுஷங்கா, பிரபாத் ஜெயசூரியா, துனித் வெல்லாலகே, ஜெஃப்ரி வாண்டர்சே.
 

PREV
click me!

Recommended Stories

Harmanpreet Kaur Net Worth: கோடிகளை குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர்! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?
KL Rahul: இந்தியாவின் நியூ ரன் மெஷின்.. ஒரே சதத்தில் பல சாதனைகளை தகர்த்த கே.எல்.ராகுல்!