IND vs AUS: இரண்டரை மணி நேரம் போட்டி தாமதம்.. 8 ஓவர் போட்டி..! இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்

By karthikeyan VFirst Published Sep 23, 2022, 9:35 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டி20 போட்டி இன்று நாக்பூரில் நடக்கிறது. 

மாலை 6.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு 7 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய போட்டி மழையால் இரண்டரை மணி நேரம் தாமதமானது. அதனால் 8 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது.

இதையும் படிங்க - ஜடேஜாவை கேட்ட 2 ஐபிஎல் அணிகள்.. நோ சொன்ன சிஎஸ்கே..! சிஎஸ்கேவிடம் மாட்டிகிட்டு முழிக்கும் ஜடேஜா

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உமேஷ் யாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் நீக்கப்பட்டு, பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா.

இதையும் படிங்க - ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் யார் இந்திய அணியில் ஆடணும்? கில்கிறிஸ்ட்டே சொல்லிட்டார்.. கேளுப்பா ரோஹித்

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), கேமரூன் க்ரீன், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், டிம் டேவிட், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), டேனியல் சாம்ஸ், சீன் அபாட், பாட் கம்மின்ஸ், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

 

click me!