India vs South Africa: கோலிக்கு பதில் ஹனுமா விஹாரி.. 2வது டெஸ்ட் போட்டியின் டாஸ் ரிப்போர்ட்

Published : Jan 03, 2022, 01:20 PM IST
India vs South Africa: கோலிக்கு பதில் ஹனுமா விஹாரி.. 2வது டெஸ்ட் போட்டியின் டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், 2வது டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கி இன்று தொடங்கியது. இந்திய நேரப்படி பிற்பகல் ஒன்றரை மணிக்கு போட்டி தொடங்குவதால் ஒரு மணிக்கு டாஸ் போடப்பட்டது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு முதுகுப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டிருப்பதால் அவர் இந்த போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஹனுமா விஹாரி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கோலி ஆடாததால் கேஎல் ராகுல் கேப்டன்சி செய்கிறார். இந்திய அணியில் கோலிக்கு பதிலாக விஹாரி ஆடுகிறார். அதைத்தவிர வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்திய அணி:

கேஎல் ராகுல், மயன்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, பும்ரா, முகமது சிராஜ்.

தென்னாப்பிரிக்க அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக் ஓய்வு அறிவித்துவிட்டதால், கைல் வெரெய்ன் விக்கெட் கீப்பராக எடுக்கப்பட்டுள்ளார். முல்டருக்கு பதிலாக ஆலிவியர் எடுக்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்கா அணி:

டீன் எல்கர் (கேப்டன்), எய்டன் மார்க்ரம், கீகன் பீட்டர்சன், ராசி வாண்டெர் டசன், டெம்பா பவுமா, கைல் வெரெய்ன் (விக்கெட் கீப்பர்), மார்கோ ஜான்சென், ககிசோ ரபாடா, கேஷவ் மஹராஜ், ஆலிவியர், இங்கிடி.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!