India vs South Africa: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு

Published : Jan 02, 2022, 10:05 PM IST
India vs South Africa: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு

சுருக்கம்

இந்தியாவுக்கு  எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடிவரும் இந்திய அணி, டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர் ஒருநாள் தொடரில் ஆடவுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2வது டெஸ்ட் போட்டி நாளை(ஜனவரி 3) ஜோஹன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் முடிந்த பின்னர் ஒருநாள் தொடர் நடக்கவுள்ளது.

ஜனவரி 19, 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் நடக்கவுள்ளன. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. 
 
இந்திய அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சாஹல், ரவிச்சந்திரன் அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்ப்ரித் பும்ரா (துணை கேப்டன்), புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ்.

இந்நிலையில், இந்த ஒருநாள் தொடருக்கான 17 வீரர்களை கொண்ட தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க ஒருநாள் அணியில் மார்கோ ஜான்சென் முதல்முறையாக இடம்பெற்றுள்ளார். 

தென்னாப்பிரிக்க ஒருநாள் அணி:

டெம்பா பவுமா (கேப்டன்), கேஷவ் மஹராஜ் (துணை கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ஜுபைர் ஹம்ஸா, மார்கோ ஜான்சென், ஜனெமன் மலான், சிசாண்டா மகளா, எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, வைன் பார்னெல், ஃபெலுக்வாயோ, ட்வைன் ப்ரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, ஷாம்ஸி, வாண்டெர் டசன், கைல் வெரெய்ன்.
 

PREV
click me!

Recommended Stories

Rahmanullah Gurbaz: மின்னல் வேக சதம்.. டி வில்லியர்ஸ் சாதனையை தகர்த்த குர்பாஸ்.. மாஸ் பேட்டிங்!
Rohit Sharma: வயது வெறும் நம்பர்தான்! 39 வயதில் புதிய உலக சாதனை படைத்த ரோகித் சர்மா!